அமைதிக்கான காந்தி விருது கடைசியாக 2014-ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு அந்த விருது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த விருது 16.01.2019 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் அடங்கிய குழு இந்த விருது வழங்கும் முடிவை மேற்கொண்டது. மகாத்மா காந்தியின் 125-ஆவது பிறந்த தினத்தையொட்டி 1995 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு காந்திய வழியில் பங்களிப்பு செய்துவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான காந்தி விருது பெற்றவர்கள் விவரம்:
- 2015-ஆம் ஆண்டு அமைதிக்கான காந்தி விருது - கன்னியாகுமரியைச் சேர்ந்த விவேகானந்த கேந்திரம் (ஊரக மேம்பாடு மற்றும் கல்வித் துறையில் சிறந்த பணியாற்றியமைக்காக அந்த அமைப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளது).
- 2016-ஆம் ஆண்டு அமைதிக்கான காந்தி விருது - அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை மற்றும் சுலப் இன்டர்நேஷனல் ஆகிய இரு அமைப்புகளும் பகிர்ந்து கொள்கின்றன. (அக்ஷய பாத்திரம் அமைப்பு, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகிறது. மனித கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தும் முறையை ஒழிக்க சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு பணியாற்றி வருகிறது).
- 2017-ஆம் ஆண்டு அமைதிக்கான காந்தி விருது - ஏகாய் அபியான் அறக்கட்டளை (ஊரக மற்றும் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக செயலாற்றி வருகிறது)
- 2018-ஆம் ஆண்டு அமைதிக்கான காந்தி விருது - யோஹெய் சசாகவா அமைப்பு (தொழுநோய் ஒழிப்புக்கு பங்களிப்பு செய்துவருகிறது).
Post a Comment