எல்லாஉயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்னும் சிந்தனையை வலியுறுத்தும் வகையில் "பராபரக்கண்ணி" நூலின் மூன்று கண்ணிகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
" நீங்கள் நல்லவர்" - கலீல் ஜிப்ரான்
யாப்பிலக்கணக் கட்டுக்குள் அடங்காத கருத்துச்செறிவு மிக்க கவிதைகளே வசனகவிதையாகும். அத்தனைய வசன கவிதை வடிவில் " நீங்கள் நல்லவர்" என்னும் கலீல் ஜிப்ரான் கவிதை அமைந்துள்ளது.
மணிமேகலை
"உண்டிக்கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே" என்னும் புறநானூற்றுப் புலவர் குடபுலவியனார் கருத்திற்கேற்ப அரும்பணி செய்தவர் மணிமேகலை
கலீல் ஜிப்ரான் - பற்றி
- பிறந்த இடம்: லெபனான்
- வாழ்ந்த இடம்: அமெரிக்கா
- மொழிவளம்: அரபு மற்றும் ஆங்கிலம்
- புகழ்பெற்ற தத்துவக்கவிதை நூல்: தீர்க்கதரிசி
ஆதிரை மற்றும் மணிமேகலை
- புகார் நகரில் வாழ்ந்த சாதுவனின் மனைவி: ஆதிரை
- ஆதிரையிடம் உணவு பெற்றவள்: மணிமேகலை
பராபரக்கண்ணி - தாயுமானவர்
- தாயுமானவர் பராபரமே (மேலான பொருள்) என்று விழித்து பாடியதால் இந்தநூல் பராபரக்கண்ணி எனப்பெயர்பெற்றது.
- தாயுமானவர் பாடல்களின் தொகுப்பு - திருப்பாடல் திரட்டு
தாயுமானவரின் புகழ்பெற்ற வரிகள்
"நெஞ்சகமே கோயில் நினைவே
சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய்
பராபரமே "
ஐம்பெரும் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம் (எழுதியவர் – இளங்கோ அடிகள்)
- மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
- குண்டலகேசி – நாகுதத்தனார்
- வளையாபதி – பெயர் கிடைக்கவில்லை
ஐஞ்சிறு காப்பியங்கள்
- சூளாமணி
- நீலகேசி – தோலாமொழித் தேவர்
- உதயணகுமார காவியம்
- நாககுமார காவியம்
- யசோதா காவியம்
Post a Comment