Type Here to Get Search Results !

New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 15)



இயல் 9 - இன்னுயிர் காப்போம் 
நூல்கள் - எழுதியவர் 
  • "உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்" என்று கூறியவர் பாரதியார் 
  • ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியவர்  - கவிமணி தேசிகவிநாயகனார் 
  • ஆத்திசூடி  - ஔவையார் 
  • ராமன் விளைவு - சர்.சி.வி.ராமன் 
  • தமிழ்க்கும்மி - பெருஞ்சித்திரனார் 
உறுப்பு தானம் விழிப்புணர்வு 
உறுப்பு தானம் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது - ஹிதேந்திரனின் மரணம். இந்திய அரசு 1994 ஆம் ஆண்டு மனித உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைச் சட்டத்தை நடைமுறை படுத்தியது.



பிம்பி சாரர்

பிம்பி சாரர் - கி.மு.558-491 - இவர் மகத நாட்டை ஆட்சி செய்த மன்னராவார். புத்தரின் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.

அன்னை தெரசா பெற்ற விருதுகள் 
  • 1962 - பத்மஸ்ரீ விருது 
  • 1962 - ரொமோன் மகசேசே விருது 
  • 1979 - அமைதிக்கான நோபல்  விருது 
  • 1980 - பாரத ரத்னா விருது 
தமிழ் இலக்கியங்களில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் 
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பற்றி 
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்து உலகம் என்ற அறிவியல் கருத்தைக் கூறியது  - தொல்காப்பியம்.

மழை பற்றி 
கடல் நீர் ஆவியாகி மேகமாகும், பின் மேகம் குளிர்ந்து மலையாக பெய்யும் எனக் கூறியது - கார் நாற்பது.

திரவப்பொருள் பற்றி 
திரவப்பொருள்களை எவ்வளவு எழுதினாலும் அவற்றின் அளவைக் சுருக்க முடியாது என்று கூறியவர் - ஔவையார்.

அறுவை மருத்துவம் பற்றி
அறுவை மருத்துவம் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருப்பது  - பதிற்றுப்பத்து
நற்றிணை.

காணும் தொலைவு 
தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றத் செய்ய முடியும் என்று கூறியவர் - கபிலர்.

Post a Comment

0 Comments

Labels