-->

Agni 5 Missile and other Nuclear-Capable Agni Missiles


அக்னி-5 பற்றிய விரிவான தகவல்கள் 
அக்னி-5  ஏவுகணை, 17 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலம் கொண்டது. அணுகுண்டுகள் உள்பட சுமார் 1.5 டன் எடை கொண்ட ஆயுதங்களை 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமந்து சென்று, எதிரி நாட்டின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

முதற்கட்ட சோதனை 
அக்னி-5 ஏவுகணை கடந்த 2012ஆம் ஆண்டில் முதலில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 2013ஆம் ஆண்டில் 2ஆவது முறையாகவும், 2015, 2016ஆம் ஆண்டுகளில் 3 மற்றும் 4ஆவது முறையாகவும் சோதனை நடத்தப்பட்டது.

நடப்பு ஆண்டில் அக்னி-5 ஏவுகணை சோதனை
5ஆவது முறையாக நிகழாண்டில் கடந்த ஜனவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இதன்பின்னர் 6ஆவது முறையாக கடந்த ஜூன் மாதம் அந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, 7ஆவது முறையாக அக்னி-5 ஏவுகணை தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அக்னி ஏவுகணை உருவாக்கம் 
 இந்தியாவின் பாதுகாப்புக்கு தேவையான ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை டிஆர்டிஓ அமைப்பு விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். 
  • அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும்.
  • அக்னி-2 ஏவுகணை 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும்.
  • அக்னி-3 மற்றும் அக்னி-4 ஏவுகணைகள் 2,500 கிலோ மீட்டர் முதல் 3,500 கிலோ மீட்டர் வரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.
அக்னி-5 ஏவுகணையின் சிறப்பு 
  • அக்னி-5 ஏவுகணை மிகவும் நவீனமானது மற்றும் சக்திவாய்ந்தது. இந்தியாவில் இருந்து சீனாவின் எந்த பகுதியையும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.
  • இந்தியாவிடம் உலகிலேயே மிகவும் அதிவேகமாக பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட பிரமோஸ் ரக ஏவுகணையும் உள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting