ஆறாம் வகுப்பு - தமிழ் பாடம்
நானிலம் படித்தவன்
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தை ஐந்தாக பிரித்தனர் தமிழர்.
- பாலை என்பதற்கு தனி நிலம் கிடையாது.
- முல்லையும், குறிஞ்சியும் தன் நிலையில் திரிந்து வறண்டு காணப்படுவதே பாலையாகும்.
- பாலையைத் தவிர்த்து உலகத்தை நானிலம் என்று குறிப்பிடுவது மரபாயிற்று .
ஐந்திணை - நிலங்கள்
- குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த பகுதியும்
- முல்லை - காடும் காடுசார்ந்த பகுதியும்
- மருதம் - வயலும் வயல்சார்ந்த பகுதியும்
- நெய்தல் - கடலும் கடல்சார்ந்த பகுதியும்
- பாலை - தனி நிலம் கிடையாது.
மீன் துறை
- மீன் துறை சார்ந்த படிப்புக்கு Aquaculture என்று பெயர்.
- தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
வளரும் வணிகம்
- பூம்புகார் நகரின் வணிகச் சிறப்பை பட்டினப்பாலையும்
- மதுரை நகரின் வணிகச் சிறப்பை மதுரை காஞ்சி வழியாகவும் அறிய முடிகிறது.
- பகல்நேர வணிகம் - நாளங்காடி என்றும்
- இரவு நேர வணிகம் - அல்லலங்காடி என்றும் அழைக்கப்படுகிறது.
- யவனர்கள் - வணிகத்திற்காக தமிழகத்திற்கு வந்த ரோமானியர் மற்றும் கிரேக்கர்களை யவனர்கள் என்று அழைத்தனர்.
தாரா பாரதி:
தாரா பாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். தம் பெயரில் உள்ள ராதா என்பதை தாரா என மாற்றி பாரதி என்பதை சேர்த்து தாராபாரதி எனச் சூட்டிக்கொண்டார்.
காளிதாசர்
புகழ்பெற்ற வடமொழிக் கவிஞர்
காளிதாசர் எழுதிய நூல்கள்
- சாகுந்தலம்
- மேகதூதம்
- ரகுவம்சம்
- குமார சம்பவம்
கீழ்த்திசை நாடுகளில் பழம்பெருமையும், சிறப்பும் கொண்ட நம் நாட்டை (இந்தியா) பூமியின் கிழக்கு வாசல் என்று கவிஞர் அழைப்பர்.
தமிழ் நாட்டில் காந்தி:
- 1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.
- தமிழ்நாட்டில் காந்தி ஆசிரமம் சேலம் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ளது
- காந்தி அடிகள் பயன்படுத்திய பொருள்களும், அவர் சுடப்பட்டபோது உடுத்தியிருந்த குருதிக்கரை படிந்த ஆடையும், அவரது அஸ்தியும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளது.
- காந்தியடிகள் மறைந்த தினமான ஜனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
வேலுநாச்சியார்:
- 31.12.2008 அன்று இந்திய அரசு வேலுநாச்சியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை படுத்தியது.
- வேலு நாச்சியார் இந்தியாவின் ஜோன் ஆப் ஆர்க் என்று புகழப்படுகிறார்.
- வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள், முதலான பொருட்கள் சிவகங்கை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
----- வெற்றி ஒன்றே நமது குறிக்கோள்! -----