தேசிய பால் வள தினம்: நவம்பர் 26
உலக அளவில் பால் உற்பத்தியில், இந்தியா முன்னிலை வகிக்க காரணம், வர்கீஸ் குரியன். இவர், 1921ல், நவம்பர் 26ல் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் பிறந்தார். அவர் பிறந்த நாளை, தேசிய பால் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ஐ.நா. அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture) மேற்பார்வையின் கீழ் ஜீன்1-ல் கொண்டாடப்படும் உலக பால் வள தின அனுசரிப்பு போல இந்தியாவிலும் பால்வள தினம் கொண்டாடுவதற்கான யோசனை இந்திய பால் வள சங்கத்தால் உருவாக்கப்பட்டது.
- தேசிய பால்வள மேம்பாட்டு கழகம் (National Dairy Development Board), இந்திய பால்வள கூட்டுறவு சங்கங்கள் (Indian Dairy Association) மற்றும் பல்வேறு மாநிலங்களின் பால் உற்பத்தி கூட்டமைப்புகளால் 2014ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தேசிய பால்வள தினம் கடைபிடிக்கப்பட்டது.
- உலக அளவில் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
- உலகின் மொத்த பால் உற்பத்தி அளவில் 18.5% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.