இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 முதல், முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.
இந்தியாவில் அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையால் 1949, நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, 1950, ஜனவரி 26-ஆம் தேதி அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
0 Comments