TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 11.06.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் (ஜூன் 9, 10 - 2018) நடைபெற்றது. இதன் சாராம்சம்
- உறுப்பினர்கள்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 8 நாடுகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த (2017) ஆண்டுதான் உறுப்பினர்களாயின என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வழித்தடம்
- சீனா பொருளாதார வழித்தடம் அமைப்பதற்கு 5000 கோடி டாலர் செலவில் 7200 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஐரோப்பிய நாடுகளிடையே சரக்குகளை கொண்டு செல்வதற்கு முயற்சித்து வருகிறது.
- ஈரானில் உள்ள சாப்ஹர் துறைமுகத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.
- துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள அஸ்கபாத் நகரில் சர்வதேச போக்குவரத்து முனையத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த வழித்தடம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஜி-7 நாடுகள் மாநாடு - கனடா
ஜி-7 நாடுகளின் மாநாடு கனடாவில் கடந்த (ஜூன் 8-9, 2018) ஆகிய நாட்களில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் நியமனம்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவராக முன்னாள் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) தலைவர் நியமனம்
UPSC யின் தற்கால தலைவராக அந்த ஆணையத்தின் உறுப்பினர் அரவிந்த் சக்சேனா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி அறிக்கை - மக்களிடம் பண இருப்பு அதிகம்
நாட்டில் உள்ள மக்களிடம் பண இருப்பு தொடர்பான விவரங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை வெளியிடுவது ரிசர்வ் வங்கியின் வழக்கம்.
பணப்புழக்கத்தை மதிப்பும் வாரம் ஒரு முறை வெளியிடப்படும்.
- 2016 ஆம் ஆண்டு மக்களிடம் ரூ.7.8 லட்சம் கோடி பண இருப்பு இருந்தது.
- 2017 ஆம் ஆண்டு மக்களிடம் ரூ.8.9 லட்சம் கோடி பண இருப்பு இருந்தது.
- 2018 ஆம் ஆண்டு மக்களிடம் ரூ.19.3 லட்சம் கோடி பண இருப்பு உள்ளது.
கடந்த நிதி ஆண்டில் (2017-18) பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.87357 கோடி இழப்பு
கடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.87357 கோடி இழப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. 21 பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது .
கேரளாவில் நிபா வைரஸ்: உஷார் நிலை வாபஸ்.
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காரணமாக உஷார் நிலை அறிவிக்கப்பட்டிருந்ததை தற்போது வாபஸ்.பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இங்கு நிபா வைரஸ் காரணமாக இது வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரென்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம்
ஆடவர் ஒற்றையர் பிரிவு
பிரென்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 11 வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு
ஆடவர் இரட்டையர் பிரிவில் வில்ஹெர்பர்ட் -மஹீட் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் இரட்டையர் பிரிவு
மகளிர் இரட்டையர் பிரிவில் சினேகோவா - கிரெஜிகோவா இணை சாம்பியன் பட்டம் வென்றது.
காண்டினென்டல் கோப்பை கால்பந்து - இந்தியா சாம்பியன்
மும்பையில் நடைபெற்ற காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில்
இந்தியா கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆசிய மகளிர் டி20 சாம்பியன்
ஆசிய கோப்பை மகளிர் டி20 சாம்பியன் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் நடப்பு சாம்பியன் இந்தியாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
0 Comments