- வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான 'இஸ்டோரியா' (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ' விசாரிப்பதன் மூலம் கற்றல் ' என்பதாகும்.
- நாணயவியல் - நாணயம் அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறையாகும்.
- வரலாற்று தொடக்க காலம் - Proto History
- கல்வெட்டியல் - கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை.
- 'தம்மா என்பது பிராகிருத சொல். இது சமஸ்கிருதத்தில் 'தர்மா' எனப்படுகிறது. இதன் பொருள் ' அறநெறி' ஆகும்.
மாமன்னர் அசோகர்
- பண்டைய அரசர்களில் பெரும் புகழும் பெற்ற அரசர்
- கலிங்க போருக்குபபின் போரிடுவதில்லை என்று முடிவெடுத்தார்
- புத்த மதத்தை தழுவினார்.
- அசோகர் பற்றிய ஆதாரங்கள்: சாஞ்சி ஸ்தூபி, சாரநாத் கற்றூண்.
- தேசியக்கொடியில் உள்ள 24 ஆரங்கள் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையில் இருந்து பெறப்பட்டவை.
- அசோகரின் சிறப்புகளை வெளிக்கொணர்ந்த ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்கள்
- வில்லியம் ஜோன்ஸ்
- ஜேம்ஸ் பிரின்சப்
- அலெக்ஸாண்டர் கண்ணின்காம்
- அசோகர் பற்றி சார்லஸ் ஆலன் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் எழுதிய நூலின் பெயர்: The Search for the India's Lost Emperor.
மானுடவியல் (Anthropology)
மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி படிப்பது மானுடவியல் ஆகும்
மனித பரிணாம வளர்ச்சி
1. அஸ்ட்ரலோபிதிகஸ் - 4 ல் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்குள்.
2. ஹோமோ ஹெபிலிஸ் - 2.3 ல் இருந்து 1.4 மில்லியன் ஆண்டுகளுக்குள்.
3 .ஹோமோ எரக்டஸ் - சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் .
5. நியாண்டர்தால் - 130000 முதல் 40000 ஆண்டுகளுக்குள் (ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். சான்றுகள் ஜெர்மனியில் கிடைக்கப்பெற்றுள்ளன).
6. ஹோமோ சேப்பியன்ஸ் - 300000 ஆண்டுகளுக்கு முன்.
7. குரோமேக்னான்ஸ் - கிழக்கு ஆப்ரிக்காவில் 50000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன்.
Post a Comment