-->

New Books 6th Standard: Important Notes of Science (Part 3)

பூமி / நிலவு ஈர்ப்பு விசை பற்றிய தகவல்கள்
  • பூமியின் பரப்பில் எடை என்பது நிறைக்கு நேர் தகவில் இருக்கும். 
  • பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு என்ற போதிலும் இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும் 
  • நிலவில் ஈர்ப்பு விசை புவியைப்போல் ஆறில் ஒரு பங்கு (1/6) தான் இருக்கும் 
  • நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் ஆறில் ஒரு பங்கு ஆகும்.
நிறை மற்றும் எடை 
  • நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருள் அளவே ஆகும் 
  • எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவியீர்ப்பு விசையை ஆகும்.
  • நிறையின் SI அலகு கிலோ கிராம் ஆகும்.
  • 1000 மில்லி கிராம் = 1 கிராம் 
  • 1000 கிராம் = 1 கிலோ கிராம் 
  • 1000 கிலோ கிராம் = 1 டன் 
  • துல்லியமான எடையைக் காண மின்னணு தராசு என்ற கருவி பயன்படுகிறது 
பிற அளவீடுகள்
  • ஓடோ மீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிட பயன்படும் ஒரு கருவியாகும்.
  • மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் 1790 - ல் பிரெஞ்சிக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • நீளத்தை அளக்கத் தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் 16 -ஆம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1889 ல் நிறுவப்பட்ட பிளாட்டினம் இரிடியம் உலோகக் கலவையிலான ஒரு படித்தர மீட்டர் கம்பி பாரிசில் எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் உள்ளது. இதன் நகல் ஒன்று டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
  • ஒரு கிலோகிராம் என்பது பிளாட்டினம் இரிடியம் உலோகக் கலவையால் ஆன ஒரு தண்டின் நிறைக்கு சமம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting