பருப்பொருள் நம்மைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் உள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றிலும் பருப்பொருள் உள்ளது. பருப்பொருள்கள் கீழ்கண்ட மூன்று நிலைகளில் காணப்படுகிறது.
- திண்மம்
- நீர்மம்
- வாயு
அணுக்கள் பருப்பொருளின் மிகச் சிறிய துகள் ஆகும்.
அணுக்களின் அமைப்பைக் கண்டறிதல்
மின்சாரத்தின் மூலம் இயங்கும் எலெக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி (Scanning Electron Microscope). மற்றும் ஊடுபுழை நுட்ப எலக்ட்ரான் கருவி (Tunnelling Electron Microscope) போன்றவைகளின் மூலம் அணுக்களின் அமைப்பைக் கண்டறியலாம்.
திண்ம திரவ வாயு நிலைகளைத் தவிர்த்து மேலும் இரு நிலைகள் உள்ளன.
1. பிளாஸ்மா
2. போஸ் ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்.
1. பிளாஸ்மா :- பிளாஸ்மா நிலை என்பது பூமியில் உள்ள பருப்பொருள் பொதுவான நிலை அல்ல. இது அண்டத்தில் கூடுதலாகக் காணப்படும் ஒரு பொதுவான நிலையாகும். எ.கா. சூரியனும் சந்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு பிளாஷ்மா நிலை ஆகும்.
2. போஸ் ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்:- மிகக் குறைவான தட்ப வெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள் நிலையாகும். 1925-ல் கணிக்கப்பட்டு 1995-ல் உறுதி செய்யப்பட்டது. இவ்வகை கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பருப்பொருளில் உள்ள மிகச் சிறிய துகள்களே அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் என அழைக்கிறோம். பருப்பொருளில் உள்ள துகள்களை நுண்ணோக்கியால் கூட பார்க்க முடியாது.
0 Comments