How to Prepare for TNPSC Group 2 Exam, TNPSC Group 2 Preparation and Tips: TNPSC Group 2 (Interview Post) தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. இதில் எளிதில் வெற்றிபெறுவது எப்படி? அதற்கான சாத்திய கூறுகள் வழிவகைகள் என்ன? TNPSC Group 2 தேர்வுக்கு தயாராவது எப்படி? என்பது பற்றி விரிவாக இங்கு காண்பொம்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் - குறள் - 619
தெய்வத்தின் துணைக் கொண்டும் ஒரு செயலில் வெற்றிபெற முடியாத நிலை இருந்தபோதிலும் ஒருவன் தன உடலை வருத்தி உழைத்த அளவிற்கு வெற்றி கிடைக்கும்.
மேற்கண்ட திருக்குறளை தினமும் உங்கள் மனதுக்குள் கூறிக்கொள்ளுங்கள், படிக்கும் போது சோர்வு ஏற்படின் இக்குறளை மனதில் நிறுத்துங்கள் சோர்வு பறந்தோடும். வெற்றி உங்களை வந்தடையும்.
முதல் படி (Step-1): முதல் நிலைத் தேர்வு (அனைவரும் அறிந்த பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ்.
பொது அறிவு பகுதியில் இருந்து 100 கொள்குறி வகை (Objective Type) கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடப்பகுதியில் இருந்து 100 கொள்குறி வகை (Objective Type) கேள்விகளும், கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள்.
Preliminary (General Studies + General Tamil or General English)
300 = மதிப்பெண்கள்
நேரம் = 3 மணி நேரம்
மொத்த வினாக்கள் = 200 (பொது அறிவு 100 வினாக்கள் + பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள்)
பொது அறிவு 100 வினாக்கள் = பட்ட படிப்பு தரத்திலும்
பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் = பத்தாம் வகுப்பு தரத்திலும் வினாக்கள் கேட்கப்படும்.
இரண்டாம் படி (Step-2): முதன்மைத் தேர்வு (Also known as Mains).
முதல் நிலைத்தேர்வில் (Prelims) அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்விற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் விவரம். வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விடையளிக்கலாம்.
விரிவான பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். இது நான்கு பகுதிகளைக் கொண்டது.
- பகுதி 1 ல் சுருக்கமான பதில்கள் அளிக்கும் வகையிலும், (35 வினாக்களில் 30 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும்)
- பகுதி 2 ல் விரிவான பதில்கள் அளிக்கும் வகையிலும் (18 வினாக்களில் 15 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும்) வினாக்கள் கேட்கப்படும்.
- பகுதி 3 ல் விரிவான பதில்கள் அளிக்கும் வகையிலும் (3 வினாக்களில் 2 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும்) வினாக்கள் கேட்கப்படும்.
- பகுதி 4 ல் விரிவான பதில்கள் அளிக்கும் வகையிலும் (4 வினாக்களில் 2 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும்) வினாக்கள் கேட்கப்படும்.
- பகுதி 1 ல் = 120 மதிப்பெண்கள்
- பகுதி 2 ல் = 090 மதிப்பெண்கள்
- பகுதி 3 ல் = 030 மதிப்பெண்கள்
- பகுதி 4 ல் = 060 மதிப்பெண்கள்
நேரம் = 3 மணி நேரம்
மூன்றாம் படி (Step-3): நேர்முகத்தேர்வு (Also known as Oral Test)
முதன்மைத் தேர்வில் (Mains) அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நான்காம் படி (Step-4): பாடத்திட்டங்களை அறிதல் (Know the Syllabus)
முதல் நிலைத்தேர்வுக்கும், முதன்மைத் தேர்வுக்கும் உள்ள பாடத்திட்டங்களை (Syllabus) முழுமையாக அறிந்திடல் வேண்டும். பாடத்திட்டங்கள் TNPSC MASTER தளத்திலும், TNPSC அலுவலக இணைய தளத்திலும் உள்ளது.
பொதுவாக பொது அறிவு பகுதி (General Studies) கீழ்கண்ட தலைப்புகளில் இருக்கும்
1. தற்கால நிகழ்வுகள் (Current Affairs)
2. வரலாறு (History)
3. புவியியல் (Geography)
4. அறிவியல் (General Science)
5. இந்திய அரசியலமைப்பு (Indian Polity and Governance – Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues)
6. பொருளாதாரம் மற்றும் சமுதாய முன்னேற்றம் (Economic and Social Development – Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Sector Initiatives)
7. சர்வதேச சுற்றுசூழல் பிரச்சனை (General issues on Environmental Ecology, Bio-diversity and Climate Change)
முதன்மைத் தேர்வு கீழ்கண்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் வரும்
- இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் & வளர்ச்சியின் தாக்கம் (Role and impact of Science and Technology in the Development of India)
- குறிப்பாக தமிழகத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் & வளர்ச்சியின் தாக்கம் (Role and impact of Science and Technology in the Development of Tamil Nadu)
- இந்திய சமுதாய மற்றும் பொருளாதார பிரச்சினைகள் )Socio Economic problems of India)
- தமிழக சமுதாய மற்றும் பொருளாதார பிரச்சினைகள் Socio Economic problems of Tamil Nadu)
- நாட்டின் தற்போதைய நிலவரம் (Current issues at National level)
- தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் (Current issues at State level)
- மாநிலம் மற்றும் மத்திய ஆட்சி பகுதிகளின் நிர்வாகம் (குறிப்பாக தமிழகம்)
ஐந்தாம் படி (Step-5): பொது அறிவு பகுதிக்கு தயாராவது எப்படி (Preparation of General Studies)
பொது அறிவு பகுதிக்கு முதலில் எப்படி ஆரம்பிப்பது? எங்கு ஆரம்பிப்பது? என்று புதியதாக போட்டித்தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு குழப்பமாக இருக்கும். இதைத் தவிர்க்க முதலில் தமிழக அரசு பாடப்புத்தகமான 6 முதல் 12 வரையிலான அறிவியல், சமூக அறிவியல், கணக்கு (6 to 10) வரையிலான புத்தகங்களை சேகரித்து படிக்க துவங்குங்கள். பின்பு ஏதேனும் ஒரு வழிகாட்டி புத்தகம் படித்தால் போதும்.
ஆறாம் படி (Step-6): முந்தைய TNPSC அசல் வினாக்களை ஆராய்தல் (Go Through Previous Year Papers)
கடந்த ஐந்து ஆண்டு அசல் வினாக்களை ஆராய்ந்து பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். உண்மை உங்களுக்கு புரியும், TNPSC தற்போது ஒரு கேள்வியை மீண்டும் அடுத்த ஆண்டு கேட்பதில்லை. ஆகவே இங்கு கேள்வியை ஆராய வேண்டுமே ஒழிய மனப்பாடம் செய்ய வேண்டாம்.
இங்கு நீங்கள் செய்ய வேண்டியது எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது, அதற்கு குறுகிய நேரத்தில் எப்படி விடையளிப்பது என்பது பற்றிதான் யோசிக்க வேண்டும். TNPSC தேர்வு என்பது கடின உழைப்பு மட்டும் அல்ல. இது கடின உழைப்புடன் கூடிய ஸ்மார்ட் வேலை ஆகியவற்றின் கலவையாகும்.
ஏழாம் படி (Step-7): பாடவாரியான தயாரிப்பு (Subject Wise Preparation)
TNPSC தேர்வுக்கு பாடவாரியான தயாரிப்பு மிக முக்கியம். உதாரணமாக வரலாறு படிக்க தொடங்கினால் 6 to 12 வரையிலான வரலாறு (சமூக அறிவியல்) பாட புத்தகங்களை படிக்க வேண்டும். வரலாறுக்கென்று தனி குறிப்பு புத்தகம் (Note Book) வைத்துக்கொள்ள வேண்டும். இதில் பிற பாடப்பகுதியை எழுதக்கூடாது. இதைப்போன்று அணைத்து பாடப் பகுதிக்கும் பின்பற்ற வேண்டும்.
எட்டாம் படி (Step-8): நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
TNPSC தேர்வுக்கு மிக முக்கியான பகுதி கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதி. கணிதம் பகுதியில் இருந்து 25 கேள்விகள் கேட்கப்படுகிறது. அதைப்போன்று நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்தும் 10 முதல் 15 கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு பகுதிக்கு அதி முக்கியத்துவம் தர வேண்டும்.
நடப்பு நிகழ்வுகள் பகுதி முதல் நிலைத் (Prelims) தேர்வுக்கு மட்டுமல்லாது முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் நேர்முகத்தேர்வுக்கும் (Interview) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC தேர்வுக்கு மேற்கண்ட எட்டு படிகளை பின்பற்றினால் ஒன்பதாவது படியான வெற்றிப்படியை சந்திக்க முடியும் ருசிக்க முடியும். வாழ்த்துக்கள்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் - குறள் - 619.
வள்ளுவன் குறல் நமது குரலாக இருக்கட்டும். வாழ்த்துக்களுடன் WWW.TNPSCMASTER.COM
0 Comments