Ads 720 x 90

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 01.05.2018

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 01.05.2018. TNPSC  தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...

இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 01.05.2018.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வர் 
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக அம்மாநில சட்டப் பேரவைத் தலைவர் கவிந்தர் குப்தா 30.04.2018 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக  மெகபூபா முஃப்தி அவர்கள் உள்ளார்.
தமிழகத்தில் 15 லட்சம் பேர் சிகிச்சைக்காக வருகை
  • வெளிநாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர் னாய் சிகிச்சை கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக இது வரை 15 லட்சம் பேர்தமிழகத்துக்கு வருகை புரிந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
அதிக காலம் முதல்வராக இருந்து சாதனை: பவன் சாம்லிங் 
  • ஒரு மாநிலத்தின் முதல்வராக அதிக காலம் பதவி வகித்த பெருமையே  சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் தட்டிச் சென்றுள்ளார். கடந்த 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ல் பதவி வகித்த பவன் சாம்லிங் இன்று வரை தோல்வியடையாமல் முதல்வர் பதவி வகித்து வருகிறார். இவர் 23 ஆண்டுகள், 4 மாதங்கள், 17 நாட்கள் (30.04.2018 -உடன்) நிறைவடைந்தன. 
  • இதற்கு முன்பு அதிக காலம் முதல்வராக இருந்து சாதனை படைத்தவர் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு அவர்களாவார்.
ரசிய ஏவுகணைகளை வாங்க இந்தியா விரைவில் ஒப்பந்தம்.
  • ரூபாய் 40,000 கோடி மதிப்பில் விமான எதிர்ப்பு ஏவுகணையான 'எஸ் -டிரயம்ப்' - ஐ ரசியாவிடம் இருந்து 5 ஏவுகணை வாங்க இந்தியா விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த ஏவுகணை எதிரிநாட்டு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் வழிமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது.
40-வது தேசிய கார் பந்தயம் - சென்னை 
  • சென்னை - ஸ்ரீ பெரும்புதூரில் நடைபெற்ற 40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் கெளரவ் மீண்டும் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
2017 - 18ல் 73 ஆயிரம் கோடி வரி வருவாய்
  • தமிழகத்திற்கு, 2017 - 18ல், 73 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. பெட்ரோல், மது வகைகளில் மட்டும், 36 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது' என, வணிகவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • தமிழக அரசிற்கு, 2016 - 17ல், 66 ஆயிரம் கோடி ரூபாய் வணிக வரி கிடைத்தது. இது, 2017 - 18ல், 73 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 
  • மத்திய அரசு, 2017 ஜூனில், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு முன், சேவை வரி வழியாக கிடைக்கும் வருவாய், மத்திய அரசுக்கு நேரடியாக சென்று விடும். தற்போது, மாநில அரசுக்கும், சேவை வரியால் வருவாய் கிடைக்கிறது. தற்போது, 1,400 பொருட்களுக்கு, 5 முதல், 28 சதவீதம் வரை, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.
பாரம்பரிய சின்னங்கள் - தனியார் வசமாகும் ஒப்படைக்க, மத்திய சுற்றுலா அமைச்சகம் முடிவு
  • பாரம்பரிய சின்னங்களை, தனியார் நிறுவனங்கள் தத்து எடுக்கும் திட்டத்தை, மத்திய சுற்றுலா அமைச்சகம் துவங்கியது. அதன்படி, நாடு முழுவதும், 93 பாரம்பரிய சின்னங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்பை, தனியார் நிறுவனங்கள் ஏற்பது குறித்த அறிவிப்பு, அமைச்சக இணையதளத்தில், சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், டில்லியில் உள்ள செங்கோட்டை, டால்மியா குழுமத்திடமும்
  • ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஜி.எம்.ஆர்., மற்றும் ஐ.டி.சி., குழுமத்திடமும் ஒப்படைக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக சோ. அய்யர் நியமனம்
  • உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, 2014ல், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறை மன்ற நடுவர் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம், 2014 நவ.,13ல் அமலுக்கு வந்தது. 
  • இதையடுத்து, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின், முதலாவது, முறைமன்ற நடுவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சோ.அய்யர் நியமிக்கப்பட்டார். தற்போது இவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments