TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 02.05.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...
இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 02.05.2018.
மாநில முதல்வர்கள் மாநாடு: பிரதமர் பங்கேற்பு
- டில்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி தலைமை தாங்கி மாநாட்டை துவக்கி வைக்கிறார். 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளாக நாடு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பலவேறு திட்டங்கள் குறித்து இறுதி செய்ய அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டினை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
அமெரிக்காவின் ஹீரோ' இந்தியாவின் கல்பனா சாவ்லா: டிரம்ப் புகழாரம்
- தன் வாழ்க்கையை விண்வெளி ஆராய்ச்சிக்காக முழுவதுமாக அர்ப்பணித்த கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய மண்ணில் பிறந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, அமெரிக்காவில் பல லட்சம் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும், உத்வேகமாகவும் திகழ்கிறார் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளா.
விமானத்தில் மொபைல் போன்ப, இணைய வசதி பயன்படுத்த அனுமதி
- விமான பயணத்தின் போது மொபைல் போனில் இணைய சேவையை பயன்படுத்தவும், பேசவும் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே டிராய் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு அமைத்த உயர்மட்ட குழுவும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. விமானம் கிளம்பி, 3, 000 மீட்டர் உயரத்தில் பயணம் செய்யும் போது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். தொலைதொடர்பு நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்ற சில நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவகாசம் தேவைப்படுவதால், இந்த திட்டம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு தான் அமல்படுத்தப்படும்
ரகசிய அணு ஆயுதத் திட்டம்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் குற்றச்சாட்டு
- ரகசிய அணு ஆயுதத் தயாரிப்பு திட்டத்தை ஈரான் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பானவை என்று கூறி, இஸ்ரேல் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகை இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அசோக் மித்ரா காலமானார்
- மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரும், மேற்கு வங்க முன்னாள் நிதியமைச்சருமான அசோக் மித்ரா செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. மார்க்சிய பொருளாதார சிந்தனையாளராக அறியப்படும் அசோக் மித்ரா, இப்போதைய வங்கதேசத்தில் பிறந்தவர். 1970 முதல் 1972 வரை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்தார்.
வேலூர் கவிஞர் ம.நாராயணனுக்கு மு.வ.விருது
- மு.வ.அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மு.வ.விருது இந்த ஆண்டு கவிஞர் ம.நாராயணனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மு.வ. அறக்கட்டளைத் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் வழங்கினார்.
முக்கிய துறைகளில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.1%-ஆகக் குறைவு
- நாட்டின் முக்கிய எட்டு துறைகளில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் சென்ற மார்ச் மாதத்தில் 4.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
- ஒட்டுமொத்த அளவில், இந்த துறைகளின் வளர்ச்சி விகிதம் சென்ற 2017-18 நிதி ஆண்டில் 4.2 சதவீதமாக இருந்தது. இது, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். இதற்கு முந்தைய 2016-17 நிதிஆண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக காணப்பட்டது.
ஆசிய போட்டிகள்: இந்திய கோல்ஃப் வீரர்கள் 7 பேர் தகுதி
- ஆசியப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா சார்பில் தீக்ஷா தாகர், அதில் பேடி உள்ளிட்டோர் தகுதி பெற்றுள்ளனர். மேலும் ஷிட்ஜி நவித் கெளல், ஹரிமோகன் சிங், ராயன் தாமஸ், ஆடவர் பிரிவிலும், ரித்திமா திலாவரி, சிபாத் சாகூ ஆகியோர் மகளிர் பிரிவும் தகுதி பெற்றுள்ளனர்.
- ஆசியப் போட்டிகளில் கோல்ஃப் விளையாட்டில் தைவான், கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட வலுவான அணிகளுடன் இந்தியா மோதுகிறது. கோல்ஃப் போட்டிகள் ஆகஸ்ட் 21 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சர்வதேச டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 125 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 112 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்தையும், 106 புள்ளிகளுடன் ஆஸி. மூன்றாம் இடத்திலும் உள்ளன.
உலக யூத் குத்துச்சண்டை போட்டி: இந்தியா சார்பில் 16 பேர் பங்கேற்பு
- ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஏஐபிஏ உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியா சார்பில் 16 பேர் பங்கேற்கின்றனர்.
துப்பாக்கி சுடுதல் தரவரிசை: இந்திய வீரர் ஷஸார் ரிஸ்வி முதலிடம்
- சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் ரிஸ்வி முதலிடம் பெற்றுள்ளார். மற்ற இந்திய வீரர்களான ரவிக்குமார் 4-வது இடம், தீபக்குமார் 9-ஆம் இடத்தில் உள்ளனர். 50 மீ. ரைபிள் பிரிவில் அகில் ஷரோன் 4, சஞ்சீவ் ராஜ்புத் 8, இடங்களில் உள்ளனர்.
- மகளிர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனு பேக்கர் இதே பிரிவில் 4-ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். மெஹுலி கோஷ் 7, அபூர்வி சந்தேலா 11, அஞ்சும் 12-ஆம் இடங்களில் உள்ளனர்.