Type Here to Get Search Results !

TNPSC Current Affairs Today in Tamil Medium Download as PDF: Date: 17.05.2018

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 17.05.2018. TNPSC  தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...

இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 17.05.2018.

TNPSC Current Affairs Today in Tamil Medium Download PDF

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு - விருதுநகர் முதலிடம் 
தமிழகத்தில் 12 ஆம் வகுப்புகான பொதுத்தேர்வு முடிவு 16.05.2018 அன்று வெளியிடப்பட்டது. இதில் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 97.05 சதவீத தேர்ச்சி பெற்று மீண்டும் விருதுநகர் மாவட்டமே முதலிடத்தை  பெற்றது. கடந்த ஆண்டு விருதுநகர் மாட்டம் 97.85 சதவீத தேர்ச்சிபெற்று முதலிடத்தை பிடித்தது.

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். இன்று  (17.05.2018) காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். 3வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னர் விஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சிபிசிஎல் நிதித்துறை இயக்குனராக ராஜிவ் அய்லவாடி நியமனம்
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் நிதித்துறை இயக்குனராக ராஜிவ் அய்லவாடி நியமிக்க பட்டுள்ளார்.

காவலர் அருங்காட்சியகம் - கோவை 
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (17.05.2018) திறந்து வைக்க உள்ளார்.

சொட்டு நீர் பாசனத்துக்கு ரூ.5000/- கோடி ஒதுக்கீடு 
சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட சிறிய அளவிலான நீர் பாசனதிட்டங்களுக்கு
ரூ.5000/- கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் 
உலக நகரமயமாக்கல் 2018 ஆய்வு அறிக்கையை ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவரங்கள் துறை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது.
தற்போது  உலக மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் நகர் புறங்களில் வாழ்கின்றனர்
  • 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் நகர் புறங்களில் வாழ்வார்கள் 
  • 2028 ஆம் ஆண்டு புது டெல்லியில் சுமார் 37.2 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாகவும், டோக்கியோ சுமார் 36.8 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாகவும் இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரியின் நடுவே அமைச்சரவை கூட்டம் - உத்தரகாண்ட் 
உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் அவர்கள் தலைமையில் தெஹ்ரி ஏரியின் நடுவே மிதவை இல்லத்தில் 16.05.2018 அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

சிரியாவில் ரசாயனத் தாக்குதல் : சர்வ தேச அமைப்பு உறுதி செய்தது 
சிரியாவின் சாராகேப் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் ரசாயனத் தாக்குதல் நடத்த பட்டதை, ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச அமைப்பு உறுதி செய்துள்ளது

ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது கெளதமாலா்
லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கெளதமாலா்வும் தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்துள்ளது. அமெரிக்கா ஏற்கனவே தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'மேக்ஸ் தண்டர்' ராணுவ ஒத்திகை - வட கொரியா எதிர்ப்பு 
'மேக்ஸ் தண்டர்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ராணுவ ஒத்திகை நடத்தியதை வட கொரியா கண்டித்துள்ளது. மேலும் சிங்கப்பூரில ஜீன் மாதம் 12 ல் நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தை மாநாட்டை (அமெரிக்கா - வட கொரியா) ரத்து செய்ய நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments

Labels