-->

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 09.05.2018

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 09.05.2018. TNPSC  தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...

இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 09.05.2018.


இந்தியாவில் டெங்கு பாதிப்பு அறிக்கை - தமிழகம் முதலிடம் 
 • டெங்கு பாதிப்பு பற்றிய மத்திய அரசின் புள்ளிவிவரங்களின் படி நாட்டில் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகமாக தமிழகத்தில் தான் அதிகமாக டெங்கு காய்ச்சலால் (1458 பேர்) பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துள்ளார். இரண்டாம் இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. இங்கு 1266 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் இறந்துள்ளனர்.
 • கடந்த ஆண்டு 2017 - ல் கேரளா முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழத்தில் குடும்ப கட்டுப்பாடு : 78.1 சதவீதம் 
 • தமிழகத்தில் 78.1 சதவீத பெண்கள் இரண்டு குழந்தைகள் பெற்று கொண்ட பின்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா கல்வி மையத்துடன் மருத்துவ பல்கலை ஒப்பந்தம்
 • மருத்துவர்களின் நிறைவாகத் திறனை மேம்படுத்தும் வகையிலான புதிய படிப்பைத் தொடங்குவதற்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின்  சுகாதார கல்வி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடு பாதுகாப்பு சபை: உறுப்பினராக இந்தியா - கெளதமாலா பரஸ்பர ஆதரவு
 • இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அரசுமுறைப் பயணமாக (முதல் அரசு முறை வெளிநாட்டு பயணம்) கெளதமாலா நாட்டுக்கு சென்றார். அப்போது ஐக்கிய நாடு பாதுகாப்பு கவுன்சலில் தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு பரஸ்பரம் ஆதரவு அளிப்பது என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பது.
ஆசிய ஊடக மாநாடு: இந்தியா 
 • மூன்று நாட்கள் நடைபெறும் ஆசிய ஊடக மாநாடு டெல்லியில் 10.05.2018 அன்று தொடங்குகிறது. இதில் இந்தியா உட்பட 40 நாடுகளைச் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் இறுதி நாளில் உலக தொலைகாட்சி விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது. 
 • இம்மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகம்,  இந்திய மக்கள் தகவல் தொடர்பியல் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிய பசிபிக் தகவல் ஒளிபரப்பு மேம்பாட்டு கல்வி நிலையம் இணைத்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
5 மாநிலங்களில் புயல் மழைக்கு 134 பேர் பலி - மத்திய உள்துறை அமைச்சகம் 
 • உத்திர பிரதேசம் ராஜஸ்தான். தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2, 3 ஆம் தேதிகளில் ஏற்பட்ட காற்று மற்றும் இடி - மின்னலுடன் பெய்த பலத்த புயல் மழைக்கு 134 பேர் உயிரிழந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெண்கள் கார் ஓட்ட அனுமதி: சவூதி அரேபியா
 • பெண்கள் கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்ட சவூதி அரேபியா நாட்டில் ஜூன் 24, 2018 முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க படுவார்கள் என்று அந்த நாட்டின் போக்குவரத்து தலைமை இயக்குனர் முகமது அல்பசமி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபராக புதின் பதவி ஏற்பு 
 • ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்க்கோவில் அமைந்துள்ள 'கிரெம்லின் ' மாளிகையில் விளாடிமிர் புதின் அதிபராக  நான்காவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். 
அர்மீனியா: புதிய பிரதமர் தேர்வு 
 • அர்மீனியாவின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் நிகோல் பஷின்யான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக 59 எம்.பி. க்களும்,எதிராக 42 எம்.பி. க்களும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடரும் :  பிரான்ஸ்
 • ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் அந்த ஒப்பந்தத்தை தொடரப்போவதாக பிரான்சு உறுதியளித்துள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting