TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 03.05.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175 வது ஆண்டு விழா
- 1842 ல் சென்னையில் தொடங்கப்பட்ட பச்சையப்பன் கல்வி நிறுவனம் தற்போது 175 வது ஆண்டு விழா ஆண்டு விழாவினை மே மாதம் 4 அன்று கொண்டாடப்பட உள்ளது. இங்கு கணித மேதை ராமானுஜன் , முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா, திட்ட கமிஷன் தலைவராக இருந்த பொருளாதார நிபுணர் ரங்கா மற்றும் முரசொலி மாறன் போன்றோர்கள் இக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர்கள் மாநாடு: காந்தி பசுமை புவி விருது - தமிழக முதல்வர் பரிந்துரை.
- மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் நோபல் பரிசினைப்போன்று "காந்தி பசுமை புவி விருது" ஒன்றினை ஏற்படுத்தி உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனி நபர் அல்லது நிறுவனத்துக்கு வழங்கலாம் என்று முதல்வர்கள் மாநாட்டில் (02.05.2018 அன்று ) கலந்து கொண்ட தமிழக முதல்வர் பரிந்துரைத்துள்ளார் .
ஆயுஷ் தேசிய ஆணையம் - விரைவில் புதிய மசோதா
- வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆயுஷ் துறைக்கான தேசிய ஆணையம் ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய ஆயுஷ் துரையின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் கூறியுள்ளார்.
தண்ணீர் பெறுவது அடிப்படை உரிமை: சென்னை உயர்நீதிமன்றம்
- ஈரோடு விவசாயிகள் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தண்ணீர் பெறுவது அனைவரின் அடிப்படை உரிமை என்று கருத்து தெரிவித்து பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
உலக நாடுகளின் ராணுவச் செலவு ரூ.116 லட்சம் கோடி; முதல் ஐந்து இடத்தில் இந்தியாவும் உள்ளது.
- சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் இண்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட அறிக்கையில் உலக நாடுகள் 2017 ஆம் ஆண்டு 1.739 லட்சம் கோடி டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.116 லட்சம் கோடி) செலவு செய்துள்ளன. இந்தியா ராணுவத்துக்காக 6,390 கோடி டாலர்களை (ரூ.4.26 லட்சம் கோடி) செலவு செய்துள்ளது.
- கடந்த 2017 ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா , சவூதி அரேபியா, ரஷியா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் மட்டும் ராணுவத்துக்கு அதிக நிதியே செலவு செய்துள்ளன.
சமூக வலைத்தளத்தில் பின்வற்றுவோர் எண்ணக்கை: மோடி முதலிடம்
- 'முகநூலில் உலக தலைவர்கள்' என்ற பெயரில் பர்ஷன் கோன் அண்ட் வோல்ப் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில்
- உலக நாடுகளின் தலைவர்களில் மற்றவர்களைக் காட்டிலும் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 4.32 கோடி பின்தொடர்வோருடன் முன்னிலையில் உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 2.31 கோடி பின்தொடர்வோருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ராணுவ தொடர்புக்கு தொலைப்பேசி வசதி - இந்தியா & சீனா
- இந்திய ராணுவமும் சீனா ராணுவமும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவசர தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக சீன அரசின் செய்தி நிறுவனமான 'குளோபல் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் போட்டி தரவரிசை - வெளியீடு
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி
- ஐ.சி.சி சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து (125 புள்ளிகள்) முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா (122 புள்ளிகள்) இரண்டாம் இடத்தில் உள்ளது
- ஐ.சி.சி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா முதலிடத்தில் உள்ளது.
- ஐ.சி.சி சர்வதேச டி -20 கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் (130 புள்ளிகள்) முதலிடத்திலும் ஆஸ்திரேலியா (126 புள்ளிகள்) இரண்டாம் இடத்திலும் இந்தியா (123 புள்ளிகள்) மூன்றாம் இடத்திலும் உள்ளது.