TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 07.05.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...
இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 07.05.2018.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியர்கள் கடத்தல்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியர்கள் கடத்தல்.
- ஆப்கானிஸ்தான் நாட்டில் பணியாற்றிவரும் இந்தியாவைச் சேர்ந்த ஏழு இந்திய பொறியாளர்களை தலிபான் பயங்கரவாத அமைப்பு கடத்தி சென்றுள்ளது.
- டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழித்திரை அறுவைச் சிகிச்சைகுறித்த 8-வது சர்வதேச மாநாடு சென்னையில் 06.05.2018 அன்று நடைபெற்றது.
- மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு 1.4 சதவீதமாக உள்ள பார்வையற்றோரின் எண்ணிக்கையை 0.3 சதவீதமாக குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை முதமைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 19.05.2018 அன்று திறந்து வைக்க உள்ளார்.
- குழந்தைகளை தத்தெடுப்பு பற்றி சி.ஏ.ஆர்.ஏ. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது நாட்டிலேயே பெண் குழந்தைகளை தத்தெடுப்பதில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது .
- கடந்த 2016-17 ம் ஆண்டுகளில் இந்தியாவில் 3,210 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 1.195 பேர் பெண்குழந்தைகள். 2017-18 ஆண்டில் நாடு முழுவதும் தத்தெடுக்கப்பட்ட 3,276 குழந்தைகளில்1,858 பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் குழந்தைகளை தத்து எடுப்பதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா (711),
- இரண்டாம் இடத்தில் கர்நாடகாவும் (252),
- மூன்றாம் இடத்தில் மேற்குவங்கமும் ( 203) உள்ளன.
- 'பொது சுகாதாரத் துறையில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் துாய்மை ஆகிய பிரிவுகளில் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டி உள்ளது,'' என 'மைக்ரோசாப்ட்' நிறுவனரும் உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
- தற்போது அவர் 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்' என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி பல நாடுகளில் மருத்துவ சேவை செய்து வருகிறார். இந்தியாவிலும் அந்த அமைப்பு குறிப்பிடத்தக்க சேவைகளை செய்திருக்கிறது.
- ஆணுக்கு, திருமண வயதான, 21, பூர்த்தி ஆகாவிட்டாலும், அவருடன், 20 வயது ஆன பெண், வாழ்க்கை நடத்தலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Post a Comment