Ads 720 x 90

TNPSC Current Affairs Today in Tamil Medium Download as PDF: Date: 16.05.2018

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 16.05.2018. TNPSC  தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...

இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 16.05.2018.

TNPSC Current Affairs Today in Tamil Medium Download PDF

எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்
எழுத்துச் சித்தர் என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் 15.05.2018 அன்று சென்னையில் காலமானார். மறைந்த  பாலகுமாரன் அவர்கள் இதுவரை 277 நாவல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும், சிறந்த வசனகர்த்தாவுக்கான மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ரயில் பெட்டி தொழில் நுட்ப கண்காட்சி 
சென்னை ஐ.சி.எப் அருகில் உள்ள ஆர்.பி.எஃப் மைதானத்தில் சர்வதேச ரயில் பெட்டி தொழில் நுட்ப கண்காட்சி  17.08.2018 அன்று தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

விலையில்லா இணைய வசதி: அண்ணாமலைப் பல்கலையில் அறிமுகம்
தமிழகத்தில் முதல் முறையாக அரசுப்பல்கலையில் அண்ணாமலைப் பல்கலை வளாகத்தில் விலையில்லா அருகலை  (Wi-Fi) இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

லோக்பால் தேர்வுக் குழு உறுப்பினராக முகுல் ரோத்தகி நியமனம் 
லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அணு ஆயுத மையம் அழிப்பு - வட கொரியா
வட கொரியா தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை மே 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை அழிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வினை காண 8 தென் கொரிய செய்தியாளர்களை வட கொரியா அளித்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு 
இந்தியாவின் ஏப்ரல் மாத இறுதியில் ஏற்றுமதி ரூ.2591 கோடி டாலராக (இந்திய மதிப்பின் ரூ.1.76 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

17 வது ஆசிய கால்பந்து போட்டி - 2019
17 வது ஆசிய கால்பந்து போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2019 ஜனவரி 5 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 24 அணிகள் இப்போட்டியில் பங்குபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

21 வது பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி - ரஷியா
ரஷியாவில் ஜீன் 14 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை 21 வது  உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 32 நாடுகள் இப்போட்டியில் பங்கு பெற உள்ளன. ரஷியா இப்போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் நடைபெற்றது. 2014 ல் பிரேசிலில் நடந்த  உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் - லி நிங் நிறுவனம் ஒப்பந்தம்
லி நிங் என்ற விளையாட்டு சீருடை நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் 2018 ஆசிய விளையாட்டு, யூத் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கும். தற்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக நரீந்தர் பத்ரா உள்ளார்.

தேசிய ஜீனியர் கூடைப்பந்து - 2018
லூதியானாவில் நடைபெற்ற தேசிய ஜீனியர் கூடைப்பந்து சாம்பியன் போட்டியின் மகளிர் பிரிவில் தமிழக அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

ICC தலைவராக ஷசாங்க் மனோகர் மீண்டும் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவின் ஷசாங்க் மனோகர் போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments