-->

TNPSC Current Affairs Today in Tamil: 20.04.2018

இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதோர் 19 கோடி பேர்: உலக வங்கி
 • உலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு(225 மில்லியன்) அடுத்து இந்தியா இரண்டாவது இடம்(190 மில்லியன்) வகிக்கிறது. உலகில் வங்கி கணக்கு இல்லாத 11 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் 2011ம் ஆண்டு முதல் வயது வந்தவர்களின் வங்கி கணக்கு எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
செல்வாக்குமிக்க 4 இந்தியர்; 'டைம்' பத்திரிகை பாராட்டு
 • அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் பத்திரிகை ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் உலக அளவில் ஆய்வு நடத்துகிறது. இதன்படி உலக அளவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை டைம் பத்திரிகை நேற்று வெளியிட்டது.
 • அதில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஓலா நிறுவன இணை நிறுவனர் பவிஷ் அகர்வால், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இளவரசர் சார்லஸ்
 • 'தனக்கு பிறகு காமன்வெல்த் கூட்டமைப்புக்கு, இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார்' என பிரிட்டன் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து இதனை அறிவித்த பிரிட்டன் ராணி, உறுப்பினர்கள் சார்லஸ் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தெற்கு ரயில்வே அரங்கிற்கு 2ம் பரிசு
 • மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த ரயில்வே கண்காட்சியில், சிறந்த அரங்கிற்கான, இரண்டாவது பரிசு, தெற்கு ரயில்வே மற்றும், ஐ.சி.எப்.,க்கு கிடைத்தது. ரயில்வேயின், 63வது வார விழா கண்காட்சி, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்தது. இந்த கண்காட்சியில், ரயில்வே மண்டலங்களின் பாரம்பரியம் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கிற்கு, அகில இந்திய அளவிலான, இரண்டாவது பரிசு கிடைத்தது.
கியூபாவில் காஸ்ட்ரோ சகோதரர்கள் சகாப்தம் நிறைவு
 • கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ அதிபர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். புதிய அதிபராக தனது வலதுகரமாக இருந்து வரும் மிக்வெல் டயாஸை தேர்வு செய்துள்ளார்.
கம்யூனிச நாடான கியூபா பற்றி:
 • கரீபியன் கடலில் அமைந்துள்ள கம்யூனிச நாடான கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ 30 ஆண்டுகள் அதிபராக இருந்தார். பின்னர் உடல் நலம் காரணமாக 2006-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலகி தனது சகோதரர் ராவூல் காஸ்ட்ரோவை அதிபராக்கினார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அதிபர் பதவியில் உள்ளார்.
முடங்கிய சுப்ரீம் கோர்ட் இணையதளம்
 • நீதிபதி லோயா மரணம் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடங்கியது. தற்போது இணையதளத்தை பார்க்க முடியாது என செய்தி வந்தது. இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட் இணையதளம், வெளிநாட்டினரால் முடக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது.
லோக் ஆயுக்தவை உடனடியாக தமிழகம் அமைக்க உத்தரவு
 • லோக் ஆயுக்தவை உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல எனவும், நிலவர அறிக்கையை ஜூலை 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறார் காப்பகங்களைப் புதுப்பிக்க ரூ.42 லட்சம் ஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
 • தமிழகத்தில் உள்ள சிறார் காப்பகங்களைப் புதுப்பிக்க ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள்: ஐஎம்எஃப் பாராட்டு
 • அரசின் கடன் அளவைக் குறைக்கும் வகையில், இந்தியாவில் முறையான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டுத் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த ஐஎம்எஃப் நிதி விவகாரத் துறை இணை இயக்குநர் அப்துல் சென்கதிஜி கூறியதாவது:
 • இந்தியாவின் மத்திய அரசின் கடன் மிக அதிகமாக, அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 70 சதவீதமாக உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதம் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் ஒட்டு மொத்தக் கடன் 70 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகக் குறையும். இந்தியா நிர்ணயித்துள்ள கடன் குறைப்பு இலக்கும், அதற்காக கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் வரவேற்கத்தக்கவை என்றார்.
2017ம் ஆண்டுகான சிறந்த திரைப்பட இணக்க மாநில விருது அறிவிப்பு:  மத்தியப்பிரதேசம் தேர்வு
 • சிறந்த திரைப்பட இணக்க மாநிலங்களுக்கான விருது இந்த ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடுவர் குழுத் தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்துள்ளார்.  இந்த விருதினைக் குடியரசுத் தலைவர் வரும் மே 3 ஆம் தேதி நடக்கவுள்ள தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் அளிப்பார்.
ராவல்பிண்டி கிராமத்துக்கு மலாலா பெயர்
 • பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராவல்பிண்டி பகுதியில் அமைந்துள்ள கிராமத்துக்கு மலாலா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியின் சமூக ஆர்வலர் பஷீர் அஹமது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 • மலாலாவுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து வழங்கப்பட்டது. அந்த வகையில் மிகவும் இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் (அப்போது 17 வயது) என்ற பெருமையையும் மலாலாவுக்குக் கிடைத்தது.
சிஐஏ-வின் அடுத்த இயக்குநராக கினா ஹஸ்பெல் நியமனம்
 • அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் அடுத்த இயக்குநராக கினா ஹஸ்பெலை அதிபர் டொனால்ட் டிரம்ப் 19.04.2018 அன்று  முறைப்படி நியமித்தார்.
உலகக்கோப்பை கால்பந்தில் 4 விடியோ உதவி நடுவர்கள், ராட்சத திரைகள்: பிஃபா அறிவிப்பு
 • ரஷியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 விடியோ உதவி நடுவர்கள் நியமனம், ராட்சத திரைகள் வைப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) அறிவித்துள்ளது. பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் மாதம் 14-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் வரை ரஷியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது
2026 யூத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முயற்சி: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் பாராட்டு
 • வரும் 2026-ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.
2020ல் '100 பால்' கிரிக்கெட் அறிமுகம்
 • இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2020ம் ஆண்டில் '100 பால்' கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கும் எனவும், ஓவருக்கு 6 பந்துகள் வீதம் 15 ஓவர்கள் வீசப்படும் எனவும், கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting