-->

TNPSC Current Affairs Today in Tamil Medium (02.04.2018)

TNPSC Current Affairs Today in Tamil Medium (02.04.2018): TNPSC Master.Com TNPSC தேர்வை மையமாகக் கொண்டு நடப்பு நிகழ்வுகளை தினமும் இத்தளத்தில் பதிவிடப்படுகிறது. TNPSC யின் அணைத்து தேர்வுக்கும் (TNPSC Group 1,  Group 2 & 2 A , Group 4) இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
இஸ்ரோ - ஜிசாட் - 6 A செயற்கைக்கோள் தகவல் துண்டிப்பு 
  • விண்ணில் 29.03.2018 அன்று வெற்றிகரமாக GSLV -F8 மூலம் செலுத்தப்பட்ட ஜிசாட் - 6 A செயற்கைக்கோள் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடன் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பை விரையில் மீட்டெடுக்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2000 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஜிசாட் - 6 A செயற்கைக்கோள் 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை - தமிழகம்
  • இந்தியாவில் உயர்கல்வித் துறையில் தமிழகம் (46.9%) முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 58 பல்கலைக்கழகங்கள் மற்றும் 2368 கல்லூரிகளும் உள்ளன. இந்திய அளவில் பெண்களின் மாணவர் சேர்க்கை விகிதம்  24.5% உள்ள நிலையில் தமிழகத்தில் 45.6% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் - அமைக்க பரிந்துரை 
  • தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் திட்டத்திற்கு (NCTC) புத்துயிர் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
  • கூடுதல் தகவல்:- அரசியல் அமைப்பு சட்டத்தின் 355 - வது பிரிவானது ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிநாட்டு படையெடுப்புகளில் இருந்தும் உள்நாட்டு பூசல்களில் இருந்தும் காக்கும் கடமையை மத்திய அரசுக்கு விதிக்கிறது.
  • தற்போது நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), I.P. உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு படை உள்ளிட்ட அமைப்புகள் உள்ளன.
ஐ.என்.எஸ். விக்ராந்த் - இந்திய போர்க்கப்பல் 
  • ரசியாவிடம் இருந்து அதிக விலை கொடுத்த வாங்கிய ஐ.என்.எஸ். விக்ராந்த்பற்றி தேச நலன் கருதி வெளியிட முடியாது என்று பாதுகாப்பு அமைச்சகம் டெல்லி உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • ஐ.என்.எஸ். விக்ராந்த் பற்றி:- ரசியா நாட்டிடம் இருந்து 2010 ஆம் ஆண்டில் இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் 2.35 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15000 கோடி) கொடுத்து வாங்கப்பட்டது. 
ராஜஸ்தான் - தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரத்து 
  • ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல்  சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting