TNPSC Current Affairs Today in Tamil Medium (01.04.2018): TNPSC Master.Com TNPSC தேர்வை மையமாகக் கொண்டு நடப்பு நிகழ்வுகளை தினமும் இத்தளத்தில் பதிவிடப்படுகிறது. TNPSC யின் அணைத்து தேர்வுக்கும் (TNPSC Group 1, Group 2 & 2 A , Group 4) இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சீன எல்லையில் இந்திய படைகள் குவிப்பு
- சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்கலாமில் இந்திய சீன வீரர்கள் கடந்த மூன்று மாதமாக முற்றுகையிட்டதின் விளைவாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சீன எல்லையையொட்டி இந்தியா தனது வீரர்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளது
சென்னை ஐ.சி.எஃப் - அலுமினிய ரயில் பெட்டி
- 2020 ஆம் ஆண்டு முதல் எடை குறைவாக உள்ள அலுமினிய பெட்டியை தயாரிக்க உள்ளதாக சென்னை ஐ.சி.எஃப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் நிகழாண்டில் 2500 ரயில் பெட்டிகள் தாயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தலாய்லாமா - ' தேங்க்யூ இந்தியா'
- சீனா திபெத்தை 1959 ல் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து புத்த மத தலைவர் தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் நினைவாக 60 வது ஆண்டை குறிக்கும் வகையில் ' தேங்க்யூ இந்தியா' என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெலுங்கானா - எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கும் திட்டம்.
- எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கும் திட்டம் தெலுங்கானா மாநிலத்தில் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இம்மாநில மக்கள் மாநிலத்தின் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம். முகவரி மாற்றத்துக்கு அனுமதி தேவையில்லை.
சர்வதேச பாதுகாப்புத் தொடர்பான 7 - வது மாஸ்கோ மாநாடு - ரஷியா
- ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச பாதுகாப்புத் தொடர்பான 7 - வது மாஸ்கோ மாநாடு ஏப்ரல் 3, 2018 ல் தொடங்குகிறது. இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள உள்ளார்.
முத்தரப்பு டி20 தொடர் - ஆஸ்திரேலியா மகளிர் அணி சாம்பியன்
- இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் பங்குகொண்ட முத்தரப்பு மகளிர் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியே வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
பாகிஸ்தான் - நீர்மூழ்கிக் கப்பல் - பாபர் III
- பாகிஸ்தான் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட அணுசக்தி திறன் வாய்ந்த, நீர்மூழ்கிக் கப்பல்-தொடங்கிய கப்பல் ஏவுகணை (SLCM) பாபர் III வெற்றிகரமாக சோதித்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் - சிந்து நதி கமிஷன்
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிரந்தர சிந்து கமிஷனின் (PIC) 114 வது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இரு தரப்பினருடனான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- சிந்து நதி உடன்படிக்கை (IWT) 1960 இல் கையெழுத்திடப்பட்டது. இதில் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபரும் கையெழுத்திதிட்டனர் சிந்து நதி அமைப்பின் ஆறு ஆறுகளின் (பீஸ், ரவி, சட்லஜ், சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ) நீர் விநியோகம் மற்றும் பகிர்வு உரிமைகளை இது கொண்டுள்ளது.