-->

List of Indian State and Union Territories

இந்தியாவின் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்
  • இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தேசியத் தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. 
  • ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 
  • 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 
  • அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. 
  • மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 2016 ன் கணக்கின்படி 707  மாவட்டங்கள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 641 மாவட்டங்கள் உள்ளன.
1.    ஆந்திரப் பிரதேசம்
2.    அருணாச்சல் பிரதேசம்
3.    அஸ்ஸாம்
4.    பிஹார்
5.    சத்தீஸ்கர்
6.    கோவா
7.    குஜராத்
8.    ஹரியானா
9.    இமாசலப் பிரதேசம்
10.    ஜம்மு காஷ்மீர்
11.    ஜார்க்கண்ட்
12.    கர்நாடகம்
13.    கேரளம்
14.    மத்தியப் பிரதேசம்
15.    மகாராஷ்டிரம்
16.    மணிப்பூர்
17.    மேகாலயா
18.    மிசோரம்
19.    நாகாலாந்து
20.    ஒரிஸா
21.    பஞ்சாப்
22.    ராஜஸ்தான்
23.    சிக்கிம்
24.    தமிழ் நாடு
25.    திரிபுரா
26.    உத்தரகண்ட்
27.    உத்தரப் பிரதேசம்
28.    மேற்கு வங்காளம்
29.    தெலுங்கானா

யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:
A.    அந்தமான் நிக்கோபார் தீவுகள்
B.    சண்டிகர்
C.    தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
D.    தாமன், தியு
E.    லட்சத்தீவுகள்
F.    புதுச்சேரி
G.    தில்லி

இந்த ஏழு ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் ஏனைய மாநிலங்களைப் போல தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன. 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting