-->

TNPSC - Important Notes of Indian Constitution: President of India in Tamil Download as PDF


TNPSC - Important Notes of Indian Constitution: President of India in Tamil Download as PDF- Click Here 13

இந்திய குடியரசுத் தலைவர் பற்றிய கேள்வி - பதில்கள் 
1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர்
2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்
3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்
4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்
5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்
9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்
10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)
11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை
13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி
14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்
16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35
17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? - ஆம்
19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை
20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு
21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்
22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை
23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்
26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்
29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்
30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்
31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்
34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.
37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர் 
44. தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? - இல்லை
47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்
48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)
49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை
50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123
53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்
54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331
56. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்
59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143
62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352
66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360
67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்
69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்
71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து
72. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,50,000
73. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,25,000
74. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
75. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை - மாநிலங்களவை
76. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.
77. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.
78. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)
79. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் - இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி.
80. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சாபாநாயகரை நியமிப்பது - குடியரசுத் தலைவர்
81. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது - குடியரசுத் தலைவர்
82. இந்திய ஒரு "குடியரசு" (Republic) ஏனெனில் அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது மக்களின் பிரதிநிதிகளால்)
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
83. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் - டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
84. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள் காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.
85. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
86. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணைக் குடியரசுத் தலைவர்
87. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.
88. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் - சஞ்சீவி ரெட்டி
89. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர் நீக்கலாம் - 1. திவால் ஆனாவர் என்றால் 2. உறுப்பினராக இருக்கும் காலகட்டத்தில், ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால் 3. குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும் உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை  அனைத்திற்காகவும் நீக்கலாம்.
90. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
91. ராஷ்டிரபதி பவன் - இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.
92. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள் - தற்போது வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.
93. ராஷ்டிரபதி வளாகத்தில் - முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. 7. தில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய இடங்களில் குடியரசுத் தலைவருக்கான "ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.
94. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.
95. அடிப்படை உரிமைகள் - குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்
96. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
97. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி - அரசியலமைப்பின் பகுதி IV
98. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள் - 47 வகைகள்
99. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது - குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்
100. இந்திய உச்சநீதிமன்றம் - அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது
101. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - நீதித்துறை
102. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன - 42வது அரசியலமைப்பு திருத்தம்
103. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது - அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
104. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ள பகுதி -  அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்.
105. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).
106. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'
107. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.
108. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
109. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting