சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ) முதல் மாநாடு
சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பின் (ஐஎஸ்ஏ) முதல் மாநாடு 11.03.2018 அன்று தில்லியில் நடைபெற்றது. 121 நாடுகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டமைப்பு, மோடியின் முயற்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவும், பிரான்ஸம் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், செஷல்ஸ், கொமோரோஸ், கயானா, ஃபிஜி, ஜிபூட்டி, சோமாலியா, மாலி, ருவாண்டா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்
சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பு : கலந்து கொண்டவர்கள்
இந்த மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள், 10 நாடுகளின் அமைச்சரவைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் முக்கியமானவர்கள்.
- ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
- பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,
- வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ,
- வங்கதேச அதிபர் அப்துல் ஹமீம்
- அபுதாபியின் இளவரசர் ஷேக் ஹமீது,
- ஃபிஜி பிரதமர் ஜோசையா வோரக் பைனிமராமா
- செஷல்ஸ் அதிபர் டேனி ஃபாரே
- கொமோரோஸ் அதிபர் அஸாலி அசூமானி
- கயானா அதிபர் டேவிட் ஆர்தர் கிராங்கர்
- மாலி அதிபர் இப்ராஹிம் பாவ்பாகர் கீடா
- ஜிபூட்டி அதிபர் இஸ்மாயில் ஒமர்
- ருவாண்டா அதிபர் பால் ககாமே
- சோமாலியாவின் துணைப் பிரதமர் மாதி முகமது குலேத்
இந்த மாநாட்டில் பிரதமர் பேசியதாவது:
சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பு முக்கிய நோக்கம்
- சூரிய மின்சக்தி என்பது மிகவும் நம்பகமானது, குறைவான செலவில் தயாரிக்கக் கூடியது மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காது. சூரிய மின்சக்தி திட்டம் குறைந்த விலையில் தரமாக கிடைக்க வேண்டும் என்பதும், சூரிய மின்சக்தி தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் நமக்குள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதும்தான் இந்தக் கூட்டமைப்பின் நோக்கம்.
இந்தியாவின் பங்களிப்பு
- மரபுசாரா மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் 175 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
- இதில் 100 ஜிகா வாட் மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படவுள்ளது.
- இந்தியாவில் இப்போது 63 ஜிகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- சூரிய மின்உற்பத்திக்கு ஒரு யூனிட் ரூ.2.44 என்ற அளவிலும் காற்றாலையில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3.46 என்ற அளவிலும் உள்ளது. இதுதான் உலகில் மிகக்குறைந்த விலையாகும்.
சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பு உறுப்பினர்கள்
- சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சூரிய மின் உற்பத்தி தொடர்பாக 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
- இந்த கூட்டமைப்பில் உள்ள 121 நாடுகளில் 61 நாடுகள் அதிகாரப்பூர்வமாக கூட்டமைப்பில் இணைந்துள்ளன.
- 32 நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கான விதிமுறைகளை ஆய்வு செய்து வருகின்றன.
Post a Comment