இந்திய வனப்பரப்பு அறிக்கை - 2017
இந்திய வனப்பரப்பு நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ளார். "இந்திய வனப்பரப்பு அறிக்கை - 2017' அறிக்கையின் படி வனங்கள் மற்றும் மரங்கள் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 24.4% அளவில் இருப்பதாக தெரிவிக்கிறது. இந்திய வனப்பரப்பு கடந்த 2 ஆண்டுகளில் 1% அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி நாடு முழுவதும் உள்ள வனப்பகுதி 8021 ச.கி.மீ. பரப்புக்கு அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய வனப்பரப்பு அறிக்கையின் சிறப்பம்சம்
- கடந்த 3 ஆண்டில் இந்தியாவின் வனப்பரப்பு 6,778 சதுர கி.மீ. அதிகரிப்பு
- 2 ஆண்டுகளில் இந்திய வனப்பரப்பு 1% அதிகரிப்பு
- தற்போது நாட்டின் மொத்த வனப்பரப்பு 7,08,273 ச.கீ.மீ ஆக உள்ளது.
- இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 21.54% ஆகும்.
- வனத்தின் பரப்பைப் போல அதன் அடர்த்தித்யும் கடந்த இரு ஆண்டுகளில் 1.36% அதிகரித்துள்ளது.
இந்திய வனப்பரப்பு அறிக்கையின் படி அதிக வனப்பரப்பு கொண்ட மாநிலங்களின் வரிசையில்
- முதலிடம் மத்தியப் பிரதேசம் (77,414 ச.கி.மீ.)
- இரண்டாம் அருணாச்சலப் பிரதேசம் (66,964 ச.கி.மீ.)
- மூன்றாம் இடம் சட்டிஸ்கர் (55,547 ச.கி.மீ.)
- லட்சத்தீவில் 90.33% பரப்பும்
- மிசோரத்தில் 86.27% பரப்பும்
- அந்தமான் நிகோபார் தீவுகளில் 81.73% பரப்பும் வனப்பகுதியாக உள்ளன.
இந்திய வனப்பரப்பு அறிக்கையின் சாராம்சம்
சுற்றுச்சூழல் கொள்கையின்படி, இந்தியாவின் மொத்த வனப்பரப்பை 33 சதவீதமாக, அதாவது, நாட்டு நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்காக, அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
- இந்தியாவிலுள்ள வனங்கள் 1936-இல் சர். சாம்பியன் என்பவரால் தரம் பிரிக்கப்பட்டன.
- 1968-இல் எச்.ஜி. சாம்பியனும், எஸ்.கே. சேத் என்பவரும் மறுஆய்வு செய்து இது குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டனர்.
- இந்தியாவில் 16 விதமான அடர்த்தியான காடுகளும் 221 விதமான சிறு வனப்பரப்புகளும் இருப்பதாக சாம்பியன், சேத் அறிக்கை கூறுகிறது.
- வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மிசோரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் ஏறத்தாழ 1200 சதுர கிமீ வனப்பரப்பு கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது.
- சமீபத்திய மதிப்பீட்டின்படி, 10% முதல் 45% அளவில் மரங்கள் காணப்படும் திறந்தவெளிக் காடுகளின் பரப்பளவு ஏறத்தாழ 3 லட்சம் சதுர கிமீ.
- வனப்பரப்பு என்கிற வார்த்தை ஒரு ஹெக்டேர் நிலப்பரப்புக்கு மேல் உள்ள பகுதியில் 10 சதவீதத்துக்கு அதிகமாக மரங்கள் இருப்பது என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.