Ads 720 x 90

Current Affairs Today in Tamil : Date: 19.02.2018

Current Affairs Today: Date: 19.02.2018 

திரிபுரா சட்டப்பேரவைத்தேர்தல்  - 2018
  • திரிபுரா சட்டப்பேரவைத்தேர்தல் 18.02.2018 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 76% சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 25 வருடங்களாக இடதுசாரிக்கூட்டணி ஆட்சி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது
சமூக பொறுப்புணர்வுக்கு நிறுவனங்களின் செலவு ரூ.28,112 கோடி
  • நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூக நல காரியங்களுக்கு செலவிட வேண்டும் என்ற விதிமுறை கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. நடப்பு நிதி ஆண்டில் 2017 நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனங்கள் சமூக நல திட்ட பணிகளுக்கு ரூ.4,719 கோடியை செலவழித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வனப்பரப்பு அறிக்கை - 2017
  • இந்திய வனப்பரப்பு நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ளார். "இந்திய வனப்பரப்பு அறிக்கை - 2017' அறிக்கையின் படி வனங்கள் மற்றும் மரங்கள் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 24.4% அளவில் இருப்பதாக தெரிவிக்கிறது. இந்திய வனப்பரப்பு  அறிக்கையின் படி அதிக வனப்பரப்பு கொண்ட மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில்  மத்தியப் பிரதேசம் (77,414 ச.கி.மீ.) இரண்டாம் இடத்தில் அருணாச்சலப் பிரதேசம் (66,964 ச.கி.மீ.), மூன்றாம் இடத்தில் சட்டிஸ்கர் (55,547 ச.கி.மீ.) மாநிலமும் உள்ளது 
ஹைபர்லூப் போக்குவரத்து - மஹாரஸ்டிரா
  • மும்பை புனே இடையே ஹைபர்லூப் தொழில்நுட்பத்தில் போக்குவரத்து வசதியே ஏற்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் விர்ஜின் குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் 3 மணி நேர பயணத்தில் இருந்து 20 நிமிடம் பயணமாக குறைக்கபடும். ஹைபர்லூப் வாகனம் மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
இந்தியாவில் அழியும் நிலையில்  4௦ மொழிகள் 
இந்தியாவில் 40க்கும் அதிகமான மொழிகள் மற்றும் வட்டாரப் பேச்சு வழக்குகள் அழியும் நிலையில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • 42 மொழிகள் 10,000க்கும் குறைவான மக்களால் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மொழிகள் ஆபத்தான மற்றும் அழியும் நிலையை நோக்கிச் செல்கின்றன. இதுகுறித்து யுனெஸ்கோ ஒரு பட்டியல் தயாரித்துள்ளது. அதில், 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் 11 மொழிகள், மணிப்பூரில் 7, ஹிமாச்சலப் பிரதேசத்திலில் 4 மொழிகள் அடங்கும். 
  • தமிழகத்தில் உள்ள கோட்டா மற்றும் தோடா ஆகிய மொழிகளும் அழியும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தெலுங்கானாவில் தகவல் தொழில்நுட்ப மாநாடு மற்றும் ஐ.எல்.எப் மாநாடு - 2018
  • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் 26 வது நாஸ்காம் இந்தியா தலைமை மாநாடு (ஐ.எல்.எப்) மற்றும் 22 வது தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. 
பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் ரூ.800/- கோடி முதலீடு 
  • பிரான்சு வளர்ச்சி வங்கியான ஏஎப்டி இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள பொலிவுறு நகரங்கள் திட்டத்தில்  ரூ.800/- கோடி முதலீடு செய்ய உள்ளது. பிரான்சு வளர்ச்சி வங்கியான ஏஎப்டி இந்தியாவில் 2008 முதல் இயங்கி வருகிறது.
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் சாம்பியன் 2018
  • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
தேசிய நடைப்பந்தயம் சாம்பியன்
  • டெல்லியில் நடைபெற்ற தேசிய நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் தில்லி விராங்கனை சௌமியா பேபி சாம்பியன் (தங்கம்) பட்டம் வென்றார்.

Post a Comment

0 Comments