TNSPC போட்டித் தேர்வினை அடிப்படையாகக்கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையளத்தில் வெளியிடப்படுகிறது. TNSPC போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் அணைத்து போட்டியாளர்களும் இதில் வெளிவரும் நடப்பு நிகழ்வுகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகள்: 25.02.2018
- அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்
- வேதி மூலக்கூறுகளை கண்டறிதல்: திண்டுக்கல் சிறுவன் சாதனை சி.சர்வேஷ்
- அரசியல் அமைப்பை மேம்படுத்த பெண்களுக்கு அதிகாரம் அவசியம்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
- பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்: இந்தியா, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
- ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டி: இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை
- தென் ஆப்பிரிக்காவில் வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
- இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வசமாக்கி சாதனை படைத்தது.
- குளிர்கால ஒலிம்பிக்: இருவேறு போட்டிகளில் தங்கம், எஸ்தர் லெடெக்கா சாதனை
அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்
- தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார்.
வேதி மூலக்கூறுகளை கண்டறிதல்: திண்டுக்கல் சிறுவன் சாதனை சி.சர்வேஷ்
- திண்டுக்கல் சென்னம்மநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வி.சிவக்குமார்- கே.பிரியதர்ஷினி தம்பதியரின் மகன் சி.சர்வேஷ். இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். சி.சர்வேஷ் 125 வேதியியல் மூலக்கூறுகளின் கட்டமைப்புகளை அடையாளம் கண்டு 3 நிமிடங்கள் 57 நொடிகளில் அவற்றின் பெயர்களை கூறி சனிக்கிழமை சாதனை நிகழ்த்தினார்.
அரசியல் அமைப்பை மேம்படுத்த பெண்களுக்கு அதிகாரம் அவசியம்
- அரசியல் அமைப்பை மேம்படுத்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தினார்.
- ஐ.நா.வின் மாற்றத்திற்கான இளையோர் மாநாடு தில்லியில் 24.02.2018 அன்று நடைபெற்றது. அதில் சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் நிலையான வளர்ச்சியும், வலிமையான பொருளாதாரமும் சாத்தியமல்ல.
- ஜூன் மாதம் கனடாவில் ஜி-7 மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் பாலினம், கடல், பிளாஸ்டிக் அச்சுறுத்தல் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்: இந்தியா, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
- பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதற்கு, இந்தியா, சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டி: இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை
- ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான வால்ட் பிரிவில் இந்தியாவின் அருணா ரெட்டி பங்கேற்றார். இறுதி போட்டியில் 13.649 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் பெற்றுள்ளார்.
- உலககோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் அருணா ரெட்டி. தங்க பதக்கத்தை சுலோவேனியாவின் டிஜாசா வும், வெள்ளி பதக்கத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி பெற்றனர்.
- தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அருணா ரெட்டி முதல் முறையாக உலககோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
- தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் மற்றும் டி2 கிரிக்கெட் போட்டிகளில் வென்று சாதனை படைத்த முதல் அணி என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்றது.
சாதனையின் விவரம்:
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவிற்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாட சென்றது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் மற்றும் டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் வென்று சாதனை படைத்தது.
இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வசமாக்கி சாதனை படைத்தது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை மட்டும் இழந்த இந்தியா, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வசமாக்கி சாதனை படைத்தது.
குளிர்கால ஒலிம்பிக்: இருவேறு போட்டிகளில் தங்கம், எஸ்தர் லெடெக்கா சாதனை
- தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செக் குடியரசின் எஸ்தர் லெடெக்கா ஸ்னோபோர்டு விளையாட்டில் 24.02.2018 அன்று தங்கம் வென்றார். அவர் ஏற்கெனவே அல்பைன் ஸ்கையிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளதால், இரு வேறு போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.
இருவேறு போட்டிகளில் தங்கம் வென்றவர்கள் விவரம்.
- இதன் மூலமாக குளிர்கால ஒலிம்பிக்கில் இருவேறு போட்டிகளில் தங்கம் வென்றவர்கள் வரிசையில், நார்வேயின் தோர்லிஃப் ஹாக், ஜோஹன் குரோட்டம்ஸ்பிராட்டன் ஆகியோருடன் லெடெக்கா இணைந்துள்ளார்.
Courtesy: தினமணி / தினமலர்
Post a Comment