-->

Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 23.02.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் வரும் 28-ஆம் தேதி திறப்பு
நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையத்தை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு வரும் 28-ஆம் தேதி திறந்துவைக்கவிருக்கிறார்.. "பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த ஹெலிகாப்டர் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை கையாளும் வசதி கொண்டது. மேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன.

நாகாலாந்து புதிய முதல்வராக சுரோஜெலி லிஜிட்சு பதவியேற்பு
நாகாலாந்தின் புதிய முதல்வராக சுரோஜெலி லிஜிட்சு புதன்கிழமை பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கோஹிமாவிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சுரோஜெலிக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் பி.பி.ஆச்சார்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சர்களைப் பொருத்தவரை, 2 புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்: முதன்முறையாக முஸ்லிம் பெண் தேர்தலில் போட்டி
மணிப்பூர் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் முறையாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார். முஸ்லிம் மதத் தலைவர்களின் தடை (ஃபத்வா) உத்தரவையும் மீறி, மணிப்பூரில் உள்ள வப்காய் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நஜீமா பீவி என்ற அந்தப் பெண் வேட்பாளர், இரோம் ஷர்மிளாவின் புதிய அரசியல் கட்சியான "மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி' சார்பில் போட்டியிடுகிறார்

சோதனைக் குழாய் மூலம் கருத்தரிப்பு: பாகிஸ்தான் இஸ்லாமிய நீதிமன்றம் அங்கீகாரம்
சோதனைக் குழாய்கள் மூலம் கருத்தரிக்கும் முறைக்கு பாகிஸ்தானின் இஸ்லாமிய நீதிமன்றம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து, அங்கு மருத்துவக் குறைபாடுகள் காரணமாக கருத்தரிக்க முடியாமல் தவித்து வரும் ஏராளமான தம்பதியருக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6%-ஆக குறையும்: ஐஎம்எஃப் கணிப்பு
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 2016-17-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. எனினும், இது தாற்காலிகமான பின்னடவுதான் என்றும், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் ஐஎம்எஃப் கூறியுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு புதிய செயல் இயக்குநர்
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) புதிய செயல் இயக்குநராக கே. சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை (22.02.2017) நியமிக்கப்பட்டார்.

மகளிர் உலகக் கோப்பை தகுதிச்சுற்று: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்க அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் கிரிக்கெட் தரவரிசை: 2-ஆவது இடத்தில் மிதாலி ராஜ்
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 2-ஆவது இடத்தையும், ஹர்மான்பிரீத் கெளர் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

வரலாற்றில் இன்று 23rd February
  • கயானா குடியரசு தினம்(1970)
  • உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)
  • ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)
  • ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)
  • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)

Related Posts

Post a Comment

Subscribe Our Posting