TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc
பாரத ரத்னா போல "பாஷா ரத்னா' விருது: வைரமுத்து வேண்டுகோள்
தலைசிறந்த படைப்பாளிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது போல "பாஷா ரத்னா' என்ற விருது வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் மாதிரி நீதிமன்றப் போட்டி
சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கத்தில் சென்னை வழக்குரைஞர் சங்கம், என். நடராஜன் அறக்கட்டளை சார்பில் அண்மையில் நடைபெற்ற மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக சட்டவியல் பள்ளி வெற்றி பெற்றது.
வேட்பாளர்கள் வங்கியில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்த ரிசர்வ் வங்கி மறுப்பு
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற்கான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விடுத்த வேண்டுகோளை ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது
நாளை மறுநாள் மத்திய நிதிநிலை அறிக்கை
2017-18-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு முதல் முறையாக ரயில்வே துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை கிடையாது. பொது நிதிநிலை அறிக்கையோடு, ரயில்வே நிதிநிலை அறிக்கை இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் பிரத்யேக அடையாள அட்டை
மாற்றுத் திறனாளிகளுக்கு, விரைவில் பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்படும்'' என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்தோருக்கு வாக்குரிமை தற்போதைக்கு சாத்தியமில்லை
உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது, தற்போதைக்கு சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புலம்பெயர்ந்து வசிப்பவர்கள், எந்தப் பகுதிக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் சிரமமான பணியாகும். எனவே, அவர்கள் வாக்களிக்கச் செல்லும் வகையில் தேர்தல் ஆணையத்தால் தற்போதைக்கு ஏற்பாடுகள் செய்ய முடியாது.
அமெரிக்கா: முஸ்லிம் குடியேற்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கும் உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது. ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்தும், அகதிகளை ஏற்பதில் கட்டுப்பாடுகள் குறித்தும் புதிய ஆணையை அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்
ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிப்பு: 1 மாதத்துக்குள் திட்டம் வகுக்க டிரம்ப் உத்தரவு
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் திட்டத்தை 30 நாட்களுக்குள் வகுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
சையது மோடி பாட்மிண்டன் சிந்து, சமீர் சாம்பியன்
- சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
- உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை தோற்கடித்தார்.
- ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான சாய் பிரணீத்தை தோற்கடித்தார்.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணியின் பயிற்றுநர் ராஜேஷ் சாவந்த் மரணம்
பத்தொன்பது வயதுக்குள்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் (உடற்பயிற்சி) ராஜேஷ் சாவந்த் (45) மரணமடைந்தார்.
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி: ரோஜர் பெடரர் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நாடலைத் தோற்கடித்து, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.பெடரர் வெல்லும் 18 -ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலிய ஓப்பனில் அவர் வெல்லும் 5-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரரான ஃபெடரர், இன்றளவிலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: ஸ்பியர்ஸ்-செபஸ்டியன் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா - இவான் டோவிக் ஜோடி தோல்வி அடைந்தது. இந்த் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷிய வீரர் இவான் டோவிக் ஜோடியானது. அமெரிக்காவின் ஸ்பியர்ஸ், கொலம்பியாவின் செபஸ்டியன் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பியர்ஸ்-செபஸ்டியன் ஜோடியானது 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சானியா-டோவிக் ஜோடியை வீழ்த்தி பட்டம் பெற்றது. இந்த தோல்வியின் மூலாம் தன்னுடைய 7 - வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சானியா மிர்சா தவற விட்டார்.
வரலாற்றில் இன்று (30 January)
- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
- இந்தியாவில் தியாகிகள் தினம்
- இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி இறந்த தினம்(1948)
- பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)
- ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது(1964)
Post a Comment