TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
வங்கக் கடலில் "வர்தா' புயல்
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. இதற்கு "வர்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் "வர்தா' புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நடா' புயல் நவம்பர் 30-ஆம் தேதி உருவாகி, வலுவிழந்து டிசம்பர் 2-ஆம் தேதி காரைக்கால் அருகே கரையைக் கடந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மொனாக்கோ நாட்டு இளவரசி அஞ்சலி
திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மொனாக்கோ நாட்டு இளவரசி சார்லேன் மௌன அஞ்சலி செலுத்தினார்.
மின்னணு பரிவர்த்தனைக்கு பல்வேறு சலுகைகள்
மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 11 புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
- பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
- விவசாயக் கடன் அட்டைகளை வைத்திருக்கும் 4.32 கோடி விவசாயிகளுக்கு நபார்டு வங்கிகள் மூலமாக "ரூபே கிஸான்' அட்டைகள் வழங்கப்படும்.
- புதிதாக எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவோர், இணைய வழியில் பணம் செலுத்தினால் 8 சதவீத தள்ளுபடியும், தவணைத் தொகையை செலுத்துவோருக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.
- இணையவழி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலான இலவச விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.
- ரயில்வே துறையில் வழங்கப்படும் உணவு, தங்குமிடம், ஓய்வறை ஆகியவற்றுக்கான கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
- மின்னணு பரிவர்த்தனை மூலம்,ரயில்வே மாதாந்திர அல்லது சீசன் டிக்கெட் வாங்குவோருக்கு 0.5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
- இணையவழியில் செலுத்தப்படும் தொகைக்கு பரிவர்த்தனைக் கட்டணம் மற்றும் வர்த்தகர்களிடம் வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு வசூலிக்காது.
- 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு லட்சம் கிராமங்களுக்கு தலா 2 ஸ்வைப்பிங்கள் இயந்திரங்கள் வழங்கப்படும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆர்எஃப்ஐடி கார்டு அல்லது ஃபாஸ்ட் டேக் கார்டுகள் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவோருக்கு
- 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
- நாடு முழுவதும் வணிகர்களுக்கு வங்கிகள் வழங்கியுள்ள 6.5 லட்சம் ஸ்வைப்பிங் மற்றும் மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்களுக்கு மாத வாடகையாக, ரூ.100}க்கு அதிகமான தொகை வசூலிக்கப்படமாட்டாது.
"உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பதவிக்காலத்தை நிர்ணயிக்க வேண்டும்'
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குறைந்தபட்ச பதவிக்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
தலாக் முறை விவாகரத்து ஏற்க இயலாதது: அலாகாபாத் நீதிமன்றம்
முஸ்லிம்களால் பின்பற்றப்படும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை மிகவும் கொடூரமானது என்றும் ஏற்க இயலாதது என்றும் அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தலாக் விவகாரம் குறித்து அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்புக்குரியது என்று மத்திய அரசும், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியமும் கருத்து தெரிவித்துள்ளன.
இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு: மத்திய அரசு திட்டம்
நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையே இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். இதற்காக, வரும் 12-ஆம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்துக்கு, பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இணைய வழி பணப் பரிவர்த்தனையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படும்.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்ற அமைச்சரவையில் முடிவு
- சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக மராத்திய போர்வீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்று அழைக்க மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- முன்னதாக இங்குள்ள ரயில் நிலையம் விக்டோரியா டெர்மினஸ் என்றும் விமானநிலையம் சஹார் சர்வதேச விமான நிலையம் என்றுமே அழைக்கப்பட்டது. 1995ம் ஆண்டு பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்த போது சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் என்று மாற்றப்பட்டது.
சாலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு
சாலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. தென் பசுபிக் கடலில் உள்ள சாலமன் தீவுகளில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 9.38 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவுக்கான புதிய தூதரை அறிவித்தார் டிரம்ப்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்கவிருக்கிறார். இந்நிலையில், தனது அரசின் முக்கியப் பதவிகளுக்கான நபர்களை அறிவித்து வருகிறார். அமெரிக்கா - சீனா உறவில் முக்கியத்துவம் வாய்ந்த தூதர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்த வகையில், டெரி பிரான்ஸ்டாட் (70) சீனாவுக்கான புதிய தூதராக அறிவிக்கப்பட்டார்.
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசம் ஹுட்டுபி மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு (உள்ளூர் நேரம்) சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 6 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.
அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த சீனா திட்டம்
அன்னியச் செலாவணியை அதிக அளவில் ஈர்க்க சில துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த சீன அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சீனாவின் பொருளாதார திட்டக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அன்னிய முதலீட்டைப் பெருமளவில் கவர மோட்டார் மின்னணு உற்பத்தி, ரயில் போக்குவரத்து உபகரணங்கள், சுரங்கம், வேளாண்மை, ரசாயன உற்பத்தி, பொழுதுபோக்குப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் குறிப்பிட்ட சில சேவை துறைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குழந்தை உரிமை ஆணைய தலைவராக கல்யாணி மதிவாணனுக்கு பதிலாக புதிய தலைவர்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவ ராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்த ரான கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து, புதிய தலைவரை நியமிக்க தமிழக அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment