TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
இன்று பாரதியார் பிறந்தநாள்
- பாரதியின் 135ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்படுகிறது
ரூ.15 கோடியில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்: அரசாணை வெளியீடு
- பதினைந்து கோடி ருபாய் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா: தமிழக அமைச்சரவையில் தீர்மானம்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:
- மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்த வேண்டும்.
- நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
- ரூ.15 கோடி செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை
- சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் பெயரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய அமைச்சரவை கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீவிர புயலாக மாறியது "வர்தா'
- தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள "வர்தா' புயல் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இதன் விளைவாக, சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.12) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வா.செ.குழந்தைசாமி காலமானார்
- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமி (87) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (டிச.10) காலை 6.30 மணிக்கு காலமானார். கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வா.செ.குழந்தைசாமி, கரக்பூர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்து, அமெரிக்கா இல்லினோஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய இவர், தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பத்மபூஷண், பத்மஸ்ரீ, சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்றுள்ளார்
வெளிநாட்டு பயணங்கள்: எம்.பி.க்களுக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் கட்டுப்பாடு
- அலுவல்பூர்வமாக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடு திரும்பியதும் தங்களின் பயணம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார். மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது சம்பந்தப்பட்ட குழுவில் உள்ள உறுப்பினர்கள் அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்க்கும் உறுப்பினர்களின் பெயரை, அடுத்தமுறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது, மக்களவைச் செயலகம் கவனத்தில் கொள்ளாது தவிர்க்கலாம் என்றும் சுமித்ரா மகாஜன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு புதிய தொழில்நுட்பம்: டிச.25 முதல் அறிமுகப்படுத்த பரிந்துரை
- செல்லிடப்பேசி மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட யுஎஸ்எஸ்டி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் சோதனை: ரூ. 1.71 கோடி புதிய நோட்டுகள் பறிமுதல்
- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.71 கோடி மதிப்புடைய புதிய ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேபாள அரசியல் சாசன திருத்த மசோதாவில் மாற்றம் செய்ய முடிவு: துணைப் பிரதமர் அறிவிப்பு
- நேபாளத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவில் மாற்றங்கள் செய்யப்படும் என்று துணைப் பிரதமர் கிருஷ்ண பகதூர் மஹாரா சனிக்கிழமை தெரிவித்தார்.
- லாம்ஜங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: நேபாளத்தில் மதேசிகள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை உள்ளடக்கிய புதிய மாகாணம் அமைப்பது, நாட்டில் குடியுரிமை பெறத் தகுந்தவர் யார், நாடாளுமன்ற மேலவையில் யார் உறுப்பினர் ஆகலாம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பது ஆகியவை தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அரசியல் சட்டத் திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்.
ஒரே வருடத்தில் மூன்றாவது தடவை 'டபுள் செஞ்சுரி: கோலி
- மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது தடவையாக 'டபுள் செஞ்சுரி' அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
தமிழகத்தில் முதல்முறையாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை
- தமிழகத்தில் முதல்முறையாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை (cashless transaction) வருகிற ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக வேளாண் விற்பனைக் குழு தெரிவித்துள்ளது.
செல்லாத பணத் தாள்கள் கேரளாவில் காகித கூழாக பயன்பாடு: ரிசர்வ் வங்கியில் இருந்து 150 டன் கொள்முதல்
- மதிப்பு இழக்க செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் பணத்தாள்கள் கேரள மாநிலம், கண்ணனூரில் உள்ள பிளைவுட் தயாரிப்பு தொழிற்கூடத்தில் காகித கூழாக பயன்படுத்தப்படுகிறது. இதுவரை இதற்கென 150 டன் பணத் தாள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், கண்ணனூரில் உள்ள வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட் லிமிடெட் என்னும் நிறுவனத்துக்கு, பிளைவுட் தயாரிப்புப் பணிக்கான காகிதக் கூழ் பயன்பாட்டுக்கு இந்த பணத் தாள்கள் அனுப்பி வைக்கப் பட்டன. அந்நிறுவனத்தில் மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பணத் தாள் களை காகிதக் கூழாக்கி பிளைவுட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Post a Comment