TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
சர்வதேச மனித உரிமைகள் தினம்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து
- சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பிறக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றை இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. மனித உரிமைகள் தினத்தையொட்டி, மற்றவர்களின் உரிமைகளை காக்க உறுதியேற்போம் என்ற வாசகத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்துள்ளது.
4 மாதங்களில் 23 ஆயிரம் விளம்பரங்கள் அகற்றம்: நீதிமன்றத்தில் அரசு தகவல்
- கடந்த 4 மாதங்களில் பாறைகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், அரசு கட்டடங்களில் வரையப்பட்ட 23 ஆயிரம் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன பாதுகாப்பு சோதனை மையம் விரைவில் திறப்பு: தொழில் துறை ஆணையர் தகவல்
- சென்னையை அடுத்த ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன பாதுகாப்பு சோதனை மையம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழக தொழில் துறை ஆணையர் அம்புஜ் சர்மா தெரிவித்தார். மத்திய அரசின் சார்பில், சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பீட்டில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி -அபிவிருத்தி மையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம், வாகன உற்பத்திக்கான வடிவமைப்பு, மாசு, செயல்திறன், பாதுகாப்பு ஆகியவற்றின் தரநிலைகளை சோதனை செய்து கொள்ளலாம் என்றார் அவர்.
என்எல்சி இந்தியா மனிதவளத் துறை புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
- என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை புதிய இயக்குநராக ஆர்.விக்ரமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். இந்த நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநராக செயல்பட்டு வந்த சரத்குமார் ஆச்சார்யா, நிறுவனத்தின் தலைவர், மேலாண் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, மனிதவளத் துறையில் தலைமைப் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த ஆர்.விக்ரமனை, மனிதவளத் துறை இயக்குநராக மத்திய அரசு நியமித்தது.
நாளை மகாகவி பாரதியார் 135ஆவது பிறந்த தின விழா
- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதியின் 135ஆவது பிறந்த தின விழா நடைபெறுகிறது.
சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல்: விமானப்படை முன்னாள் தளபதி கைது
- சொகுசு ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில், இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (09.12.2016) கைது செய்தனர்.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டம்
- நெகிழி (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வதைத் தொடங்கி விட்டதாகவும் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09.12.2016) தெரிவிக்கப்பட்டது. நெகிழி ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. ரூ.10 மதிப்புடைய 100 கோடி நெகிழி ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான கள ஆய்வை மேற்கொள்வதற்காக கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேசுவரம் ஆகிய ஐந்து நகரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
- சராசரியாக ஐந்து ஆண்டுகள் புழக்கத்தில் இருக்கும் நெகிழி ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ளநோட்டுகளை அச்சடிப்பது கடினமாகும். உலகிலேயே, ஆஸ்திரேலியாவில்தான் முதல்முறையாக நெகிழி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன
தேசிய கீதம் தொடர்பான உத்தரவு: மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
- திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்பாகும்போது திரைப்படம் பார்க்க வந்திருப்போர் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இருந்து மாற்றுத் திறனாளிகளிக்கு விலக்கு அளிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (09.12.2016) தெரிவித்தது.
சோசலிச தலைவர் விஸ்வாம்பரன் மறைவு
- கேரளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சோசலிச இயக்கத்தின் மூத்த தலைவருமான பி.விஸ்வாம்பரன் காலமானார். அவருக்கு வயது 91. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் தகவல் தொடர்புக் கொள்கை
- தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மாநாட்டில் இதுகுறித்து அவர் பேசியதாவது:. அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசித்து, செய்தி-தகவல் தொடர்புக் கொள்கையை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும் என்று மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். மேலும், திரைப்படம் தயாரிப்பதற்குச் சாதகமாக உள்ள மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ரூ.1 கோடி மதிப்பிலான தேசிய விருது வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்தியாவை முக்கிய ராணுவ கூட்டாளியாக்கும் சட்டம்: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
- நேட்டோ நாடுகள், இஸ்ரேல் ஆகியவைகளுக்கு இணையாக இந்தியாவையும் அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக்க வகை செய்யும் சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2017-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அதிகாரமளித்தல் சட்டம் எனும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் 1292-ஆவது பிரிவில், அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டம், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 375 உறுப்பினர்களும், எதிராக 34 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்: நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு - அதிகாரங்கள் பிரதமருக்கு மாற்றம்
- தென் கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹையை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரைப் பதவியிலிருந்து நீக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்திருந்தன. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களுக்கும் அதிகமான ஆதரவைப் பெற்றதால், பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியதாக அவைத் தலைவர் சுங் சே-சியூன் அறிவித்தார். நேர்மையாளர் என்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்றும் கருதப்பட்ட பார்க் கியூன்-ஹை தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இது மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் மறைவு
- பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் கிளென் (95) வியாழக்கிழமை காலமானார். அமெரிக்க விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் கீழ் பறக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஏழு வீரர்களில் ஜான் கிளென்னும் ஒருவர். அவர்கள் அனைவரும் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விமானிகளாகப் பணியாற்றியவர்கள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் போர் விமானியாக இருந்த ஜான் கிளென், ஏராளமான வீர விருதுகளைக் குவித்துள்ளார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட முதல் விண்வெளிப் பயணத்தை அவர் மேற்கொண்டார். விண்வெளியில் 3 முறை பூமியைச் சுற்றி வந்து, விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்கர் என்ற சாதனை படைத்தவர் ஜான் கிளென். தமது 77-ஆவது வயதில் மீண்டும் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1974-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
Post a Comment