TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
Latest Current Affairs Contains in following Titles:
- நான்கு அடுக்கு வரி விதிப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு: 5 முதல் 28% வரை வரி
- ஜம்மு-காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் மங்கத் ராம் சர்மா காலமானார்
- புதிய ரூ.1 கரன்சி நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
- ஐ.நா.,வின் சட்ட வல்லுநராக இந்திய இளம் வழக்குரைஞர் தேர்வு
- கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தருக்கு தேசிய விருது
- ஹப்பிளை விட 100 மடங்கு சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி: நாசா உருவாக்கி சாதனை
- சிறந்த தனியார் வங்கி கேவிபி: டன் & பிராட்ஸ்டிரீட் விருது
- இந்தியாவின் தர மதிப்பீட்டில் மாற்றமில்லை: ஸ்டாண்டர்டு அண்டுபூர் அறிக்கை
நான்கு அடுக்கு வரி விதிப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு: 5 முதல் 28% வரை வரி
- சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) 5,12,18,28 சதவீதம் என நான்கு அடுக்காக விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் வியாழக்கிழமை (03.11.2016) இறுதி முடிவு எடுத்துள்ளது. இதன்படி அத்தியாவசியப் பொருள்களுக்கு குறைந்தபட்சமாகவும், ஆடம்பரப் பொருள்களுக்கும், புகையிலை உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கும் அதிகபட்சமாகவும் வரி விதிப்பு இருக்கும். ஜிஎஸ்டி வரி அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் மங்கத் ராம் சர்மா காலமானார்
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் துணை முதல்வருமான மங்கத் ராம் சர்மா, சிறிது காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை (03.11.2016) காலை அவர் காலமானார்.
புதிய ரூ.1 கரன்சி நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
- ரிசர்வ் வங்கி புதிய ரூ.1 கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளது. புதிய நோட்டில் ஏ சின்னத்துடன் உட்பொதிந்த க எழுத்துடன் இருக்கும். புதிய ரூ.1 நோட்டின் நிறம் பெருவாரியாக முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற நிற கலவையிலும் இருக்கும்.
ஐ.நா.,வின் சட்ட வல்லுநராக இந்திய இளம் வழக்குரைஞர் தேர்வு
- ஐக்கியநாடுகள் சபையின் சார்பில் சர்வதேச சட்ட நிபுணர்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களை கவனிப்பதற்காக சுழற்சி முறையில் 34 புதிய பிரதிநிதிகளை நியமிப்பதற்காக ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா-கரிபியன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் இன்று ரகசிய வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில், இந்திய இளம் வழக்குரைஞர் அனிருத்தா ராஜ்புத்(33) 160 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தருக்கு தேசிய விருது
- கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவோருக்கு ஆண்டுதோறும் தேசிய கால்நடை மருத்துவ அறிவியல் அகாடமி உறுப்பினர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் கால்நடை மருத்துவத் துறைக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கால்சா கால்நடை மருத்துவக் கல்லூரியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் அவருக்கு தேசிய கால்நடை மருத்துவ அறிவியல் அகாடமி விருது வழங்கப்பட்டது.
ஹப்பிளை விட 100 மடங்கு சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி: நாசா உருவாக்கி சாதனை
- அமெரிக்காவின் நாசா விண் வெளி ஆய்வு நிறுவனம், கடந்த 1990-ம் ஆண்டு ஹப்பிள் என்ற அதிநவீன தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. அந்த தொலைநோக்கி கடந்த 26 ஆண்டு களாக ஆயிரக்கணக்கான அரிய படங்கள், தகவல்களை அனுப்பி உள்ளது. இதன்மூலம் பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்கள், நட்சத் திரங்கள், சூரிய குடும்பங்கள் உட்பட பல்வேறு அரிய தகவல் கள் கிடைத்தன. இந்நிலையில், ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்திவாய்ந்த ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி’யை ஐரோப்பிய விண் வெளி ஆய்வு கழகம் மற்றும் கனடா விண்வெளி ஆய்வு கழகத் துடன் இணைந்து நாசா உருவாக்கி முடித்துள்ளது. இதில் உள்ள அகச்சிவப்பு கேமராக்கள் மிகவும் நுண்ணு ணர்வு கொண்டவை. எனவே, சூரிய கதிர்களில் இருந்து இந்த கேமராக்களைப் பாதுகாக்க வேண் டியது அவசியமாக உள்ளது.
சிறந்த தனியார் வங்கி கேவிபி: டன் & பிராட்ஸ்டிரீட் விருது
- கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), தனியார் வங்கிகளில் சிறப்பான வங்கியாக செயல்படுகிறது. முன்னுரிமைக் கடன்களுக்கு இந்த வங்கி முன்னுரிமை அளிக்கிறது என்று டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் சான்றளித்துள்ளது. இரண்டாம் காலாண்டில் வங்கியின் நிதி நிலை அறிக்கை வெளியான நிலையில் வங்கியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து இந்த விருதை அளித்து கவுரவித்துள்ளது.
இந்தியாவின் தர மதிப்பீட்டில் மாற்றமில்லை: ஸ்டாண்டர்டு அண்டுபூர் அறிக்கை
- சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் நிறுவனம் இந்தியாவின் தர குறியீட்டில் மாற்றமிருக்காது என குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செய்து வந்த நிலையில் தர மதிப்பீடு உயர்த்தப்பட வாய்ப் பில்லை என எஸ் அண்ட் பி கூறியிருக்கிறது. இந்தியாவினுடைய தர குறியீடு ‘பிபிபி-’ என குறிப்பிட்டுள்ளது. முதலீடுகள் குறைந்துள்ளதன் காரணமாக தரக் குறியீட்டில் எந்த மாற்றமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிபிபி- என்கிற குறியீடு குறைவான முதலீடு தரம் கொண்ட குறியீடாகும். இந்தியா மேற்கொண்டு வரும் பொருளா தார சீர்திருத்தங்கள் காரணமாக தரகுறியீடு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக உள்நாட்டு நிகர உற்பத்தியில் மத்திய அரசின் கடனை 60 சதவீதத்துக்கும் கீழாக குறைப்பதற்கான முயற்சிகளில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது ஜிடிபியிடன் ஒப்பிடும்போது மத்திய அரசின் கடன் 69 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment