இன்றைய முக்கிய தினங்கள்: 12.06.2016
- இன்று உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
- இன்று ரஷ்ய தினம்
- சூரிய மின் சக்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு பொது பிரிவிலும், தனிப்பட்ட நபர்கள் பிரிவிலும் விருது கிடைத்துள்ளது
ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை
- உத்திரஹாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை கரையில் திருவள்ளுவரின் முழு உருவசிலை 26.06.2016 அன்று திறக்கபடுகிறது
நேபாளத்திற்கு இணைய வசதியே அளித்துள்ளது சீனா
- அதிவேக இணைய வசதிக்காக நேபாளம் இந்தியாவை சார்ந்திருக்கும் நிலையே மாற்றும் வகையில் கண்ணாடி இழை கேபிள் தொடர்பை சீனா நேபாளத்திற்கு வழங்கியுள்ளது
- அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பு மாநாடு (NSG - Nuclear Suppliers Group) 24.06.2016 அன்று நடைபெற உள்ளது இதில் இந்தியா உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவுசெய்யப்படும் . சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியா உறுப்பினராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது இவ்வமைப்பில் மொத்தம் 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்தியா உறுப்பினராவதற்கு தடை ஏற்படும்.
- சிதம்பரம் அருகே புவனகிரி தாலுக்கா ஆதிவராகநத்தம் கிராமத்தில் ராஜராஜசோழன் தனது தாய் மீது கொண்டிருந்த அதீத பாசத்தால் தாயிற்காக ஒரு கோயிலை கட்டியுள்ளது கல்வெட்டின் மூலம் தெரியவந்துள்ளது என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- முதலாம் இராஜேந்திர சோழன் சோழ வரலாற்றில் ஒப்பற்ற மன்னனாக விளங்கியவன். கி.பி. 1012 ஆம் ஆண்டு இளவரசனாக முடிசூட்டப்பட்டான்.
- தமது தந்தை முதலாம் இராஜராஜ சோழன் இறந்தப் பிறகு கி.பி. 1014 ஆம் ஆண்டு சோழப் பேரரசின் மன்னனாக அரியணையேறினான்.
- கங்கை வரை படையெடுத்துச் சென்று அங்கிருந்த நாடுகளை எல்லாம் வென்று கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரால் தமது தலைநகரான கொங்கை கொண்ட சோழபுரத்தை புனிதமாக்கியதோடு அல்லாமல் கங்கை படையெடுப்பின் நினைவாக ஜலஸ்தம்பம் நாட்டினான். அதாவது சோழகங்கம் என்ற ஏரியை நிர்மாணித்து அப்பகுதியை வளமாக்கினான்
அறிமுக போட்டியில் தொடக்க வீரராக இறங்கி சதம் அடித்த முதல் இந்தியர் கே.எல்.ராகுல்
- ஹராரேவில் 11.06.2016 அன்று ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில், அறிமுகப் போட்டியிலேயே தொடக்க வீரராக களம் இறங்கி சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கே.எல்.ராகுல்.
ஜப்பானில் திறக்கப்படுகிறது `நிர்வாண உணவகம்
- ஜப்பான் நாட்டின் முதல் நிர்வாண உணவகம் ஜூலை 29 ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்படுகிறது. லண்டன், மெல்போர்ன் நகர்களைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நிர்வாண உணவகம் ஜூலை 29 ஆம் தேதி திறக்கப்படுகிறது. `தி-அமிர்தா' என பெயரிடப்பட்டுள்ள அந்த உணவகத்துக்குள் செல்வதற்கு பல்வேறு நிபந்தணைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Post a Comment