யோகாவை கவுரவிக்கும் வகையில் அடுத்தாண்டு முதல் தேசிய அளவில் 2 விருதுகள் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி
- நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. சண்டிகரில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்துகொண்டார்.
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 21 மாநிலங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளும் விதமாக "ஒலிம்பியாட்" என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. யோகாவை பிரபலப்படுத்துவோரை கவுரவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு (2017) முதல் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் இரண்டு விருதுகள் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
தேசிய வேலைவாய்ப்பு தினம்: ஜூலை 20-ஆம் தேதி
- இளைஞர்கள் மத்தியில் பல்வேறு துறைகள் சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 20-ஆம் தேதி, தேசிய வேலைவாய்ப்பு தினம் கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது
கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படும்: முதல்வர் சித்தராமையா
- கர்நாடக முற்போக்கு மடாதிபதிகள் அமைப்பு சார்பில் பெங்களூரு, அம்பேத்கர் மாளிகையில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாள் விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: கர்நாடகத்தில் மூடம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.