Type Here to Get Search Results !

TNPSC - Current Affairs in Tamil Medium 23.06.2016

மாசுபடுதலை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயார்: சீனா
  • இந்திய நகரங்களில் பெருகிவரும் மாசுபடுதலை கட்டுப்படுத்துவதற்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனத் தலைநகர் பெய்ஜிங், இந்தியத் தலைநகர் தில்லி ஆகிய 2 முக்கிய நகரங்களும் மாசுபடுதலால் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார நகரமாக விளங்கும் ஷாங்காய் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 15ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு (எஸ்.சி.ஓ)
  • எஸ்.சி.ஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் இன்று (23.06.2016) நடைபெறுகின்றது. எஸ்.சி.ஓ., ( ஷாங்கை ஒத்துழைப்பு ) அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான்,உ ஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய 6 நாடுகள் உள்ளன.. பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு கலந்து கொள்ள 2 நாள் சுற்றுப்பயணமாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கெண்ட் இன்று பிற்பகல் சென்றடைந்தார்
பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது
  • பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கைவிடப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.  மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது. சில குழந்தைகளுக்கு மாம்பழச்சாறால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் அந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று பதில் அளித்தார்.


சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி
  • தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்க ரூ.202 கோடியில் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்


தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி
  • தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 63% அதிகரித்ருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்


தமிழகத்தின் மாநகராட்சி மேயர் தேர்வு குறித்த சட்டதிருத்த மசோதா
  • சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி மேயரை தேர்வு செய்ய வழிவகுக்கும் புதிய சட்டதிருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக அவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார். மாநகராட்சி மேயரை மக்கள் தேர்வு செய்து வந்த நிலையை மாற்றி, சட்டப்பேரவை உறுப்பினர்களால், மேயர் தேர்வு செய்ய வழி வகுக்கும் புதிய சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். புதிய சட்ட திருத்த மசோதா 132 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது
  • தொகுதிகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு
  • இந்திய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை தர்மசாலாவில் இன்று (23.06.2016) வெளியிட்டார் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர். அனில் கும்ப்ளே  இந்திய அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னைக்கு 3ம் இடம்
  • இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னைக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. நியூ யார்க்கில் இருந்து செயல்படும் மெர்சர் என்று நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் மக்கள் வாழ அதிகம் செலவாகும் நகரங்களில் தில்லி முதலிடத்திலும், மும்பையை அடுத்து சென்னை 3ம் இடத்திலும் உள்ளது..
  • உலக அளவில் எடுத்துக் கொண்டால், சென்னை மாநகரம் 158வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் உலகளவில் சென்னை 157வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • தகவல் தொழில்நுட்ப நகரமாக மாறி வரும் பெங்களூரு 22வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 180வது இடத்தைப் பிடித்துள்ளது


தெலுங்கானாவில் விரைவில் ஆட்டோமெட்டட் டிரைவிங் டெஸ்ட் அமல்
  • தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் ஆட்டோமெட்டட் டிரைவிங் டெஸ்ட் முறை அமல்படுத்த போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. வீடியோ பதிவு ஆதாரங்களுடன் கூடிய சென்சாரை பயன்படுத்தி அதி நவீன முறையில் ஓட்டுநர் தேர்வு நடத்த தெலுங்கானா போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.


ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து - பொதுவாக்கெடுப்பு
  • ஐரோப்பிய நாடுகள் தங்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக 1993-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. இந்த கூட்டமைப்பில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகள் பிற நாடுகளுக்கு எல்லைகளை திறந்து வைத்துள்ளன.
  • ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.
  • இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக இங்கிலாந்து மக்கள் கருத தொடங்கினார்கள். இங்கிலாந்து அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிற நாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
  • இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க இங்கிலாந்தில் இன்று (23.06.2016) பொதுவாக்கெடுப்பு நடைபெறுகிறது

Post a Comment

0 Comments

Labels