மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று (16.06.2016) இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்
- தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, 3 நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வருகிறார். தாய்லாந்து துணைப் பிரதமர், 5 மூத்த அமைச்சர்கள், 46 தொழிலதிபர்கள் ஆகியோருடன் இந்தியா வரும் பிரயுத் சான்-ஓ-சா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
- கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வது, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம்-முதலீடு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள், அந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று தெரிகிறது
சாகித்ய விருதுக்கு குழ. கதிரேசன், லட்சுமி சரவணக்குமார் தேர்வு
- சாகித்ய அகாடமி வழங்கும் பால் சாகித்ய விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த குழ.கதிரேசனும் யுவ புரஸ்கார் விருதுக்கு லட்சுமி சரவணகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குழ. கதிரேசன் குழந்தைகள் இலக்கியம் தொடர்பான பங்களிப்புக்காக பால் சாகித்ய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கானகன் என்ற இலக்கியப் படைப்புக்காக சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி சரவணகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 21 மொழிகளில் பால் சாகித்ய விருதும், 24 மொழிகளில் யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.
மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் வசதி
- வெளிநாடு செல்வோருக்கான மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடும் வசதி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது 35-வது மையமாகும்
15வது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்
- 15வது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று (16.06.2016) தொடங்கியது. வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பித்த ரோசய்யா, பின்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட உரையை அவர் வாசித்தார். இதில் கூறப்பட்டுள்ளதாவது
- ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தியுள்ளார்.
- டாஸ்மாக் கடைகள் 500யை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
- சிறு குறு தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- புதிய கிரானைட் கொள்கை உருவாக்கப்பட்டு கிரானைட் கற்களின் விற்பனை முறைப்படுத்தப்படும்
- குடிசைகள் இல்லா நகரமாக சென்னையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடல் நீரை குடிநீராக்கும் 2 நிலையங்களின் தொடக்கப்பணிகள் விரைவுப்படுத்தப்படும்.
- வேலைவாய்ப்புகளை அதிகரிக்க புதிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும். லோக் அயுக்தா அமைக்கப்படும்.
- சைபர் குற்றங்கள் தடுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- இலங்தக தமிழர் பிரச்னை, முல்லை பெரியாறு திட்டம், காவிரி ஆணையம் ஆகியவற்றில் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
- சென்னை அருகே மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பள்ளி சிறார்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான இலவச கல்வி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கல்வித்தரத்தை மேம் படுத்த இலவச லேப்டாப் போன்ற சேவைகள் தொடரும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை: ஐ.நா.வில் இந்தியா தகவல்
- இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தன்மை வாய்ந்த பிரத்யேக அடையாள அட்டையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஐ.நா. சபையில் மத்திய அமைச்சக செயலர் வினோத் அகர்வால் தெரிவித்தார்.
- உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். அவர்களில் 80 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 2.7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
நன்றி: தினமணி நாளிதழ்
0 Comments