பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்களை, வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது
- கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் சாதனை செய்திருந்தது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட்டை ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- ஜூன் 22-ஆம் தேதி காலை 9.25 மணிக்கு இந்தியாவின் கார்டோசேட்-2 செயற்கைக்கோள் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா நாடுகளின் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
- இந்தியாவில் பிரசவத்தின்போது நேரும் சிக்கல்களால் ஒரு மணி நேரத்துக்கு 5 பெண்கள் வீதம் உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 2.6 கோடிப் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். அவர்களில் பேறுகால சிக்கல்களால், சுமார் 45,000 பேர் உயிரிழக்கிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 5 பெண்கள் வீதம் உயிரிழக்கிறார்கள். இது, சர்வதேச அளவில் பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகளில் 17 சதவீதமாகும்.
- பிரசவத்துக்குப் பிந்தைய அதீத இரத்த இழப்பே, பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது. அதாவது, 37 சதவீதம் பேர், அதீத இரத்த இழப்பு காரணமாக உயிரிழக்கிறார்கள். குழந்தை பிறந்த அடுத்த 24 மணி நேரத்தில், 500 மி.லி. முதல் 1,000 மி.லி. வரை இரத்த இழப்பு ஏற்படுமானால், அது அதீத ரத்த இழப்பாகக் கணக்கிடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தூர்தர்சன் இயக்குநராக சுப்ரியா சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- இந்தியாவை உலகளாவிய ராணுவக் கூட்டாளியாக சேர்ப்பது தொடர்பான மசோதா அமெரிக்காவின் மேலவையான செனட் சபையில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் இம்மசோதா தோல்வியடைந்தது.
- இந்தியாவுடன் மேம்படுத்தப்பட்ட ராணுவ ஒத்துழைப்பை அளிப்பதற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை 17.06.2016 அன்று ஒப்புதல் அளித்தது
0 Comments