-->

TNPSC - Current Affairs Today - Date: 09.05.2016 (தற்கால நிகழ்வுகளின் தொகுப்புகள்)

தற்கால நிகழ்வுகளின் தொகுப்புகள்  - நாள்: 09.05.2016
(Current Affairs Today - Date: 09.05.2016)


1. இந்தியா முழுவதும் காவல் துறை, ஆம்புலன்ஸ்  மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய அவசரதேவைகள் அனைத்திற்கும் 2017 ஜனவரி 1 முதல் '112' என்ற எண்ணை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது 

2. நாடு முழுவதும் உள்ள 55, 669 கிராமங்களை வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செல்லிடபேசி இணைப்புகளை வழங்க மத்திய  அரசு திட்டமிட்டுள்ளது.

3. உலக அன்னையர் தினம் 08.05.2016 - அன்று அனுசரிக்கப்பட்டது .

4. ராஜஸ்தான் மாநில எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளது .

5. கங்கை நதியே வரும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தூய்மை படுத்தவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . இதற்கான கங்கை நதி தூய்மைபடுத்தும்  செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 15.05.2016 அன்று தொடங்கி வைக்க உள்ளார் .

6. மாட்ரிட்  ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சைமோனோ  ஹேலப் சாம்பியன் பட்டம் வென்றார்

7. புதுசேரியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் மகளிர் கூடைபந்து போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழ்நாடும், மகளிர் பிரிவில் கர்நாடகமும் சாம்பியன் பட்டம் வென்றது .

Related Posts

Post a Comment

Subscribe Our Posting