10/31/2015

TNPSC Group 4 and Group 2 General Tamil Preparation Part - 1

TNPSC குரூப் 2,மற்றும் குரூப் 4  தேர்வினைப் பொருத்தவரை தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பொதுத்தமிழ் ஒரு இன்றியமையாத பகுதியாகும். இவற்றில் நன்கு தேர்வாகி விட்டாலே வெற்றியில் பாதி படிக்கட்டு ஏறியது மாறிதான். எனவே பொதுத்தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

பொதுத் தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவற்றில் வினாக்களை நன்கு கூர்ந்து ஆராய்ந்து பதில் அளிக்க வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. அதே வேளையில் நேர விரயமும் செய்யக்கூடாது.

இந்தக்  100 வினாக்கள்  பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். எனினும் 6 முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்களை நன்றாக படிக்க வேண்டும். படிக்கும் பொது புரிந்து படித்து முக்கியமானவற்றை குறிப்புகள் எடுக்க வேண்டும். ஏனெனில் தேர்வுக்கு முன்பு எளிதில் படிக்க உதவும்.

தமிழ் தேர்வை பொறுத்த வரையில் மிகவும் எளிது. 

சில தமிழ் பாடங்களை படிக்கும்போது சில யுத்திகளை கையாள வேண்டும். 

 For example

உலக தமிழ் மாநாடு பற்றி அனைத்து தேர்வுகளிலும் பெரும்பாலும் கேட்கபடுகிறது. மாநாடு நடைபெறும் இடத்தை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது.

மாநாடு வரிசை 
1. கோலாலம்பூர்
2. சென்னை
3. பாரிஸ் 
4. யாழ்ப்பாணம்
5. மதுரை 
6. கோலாலம்பூர்
7. மொரிசியஸ்
8. தஞ்சாவூர்

எளிதான வழி: கோயிலுக்கு சென்ற பாட்டியே யாராவது றித்தால் கோயிலிலே மொட்டையடித்து ண்டிக்கபடுவார்கள். இதில் வரும் முதல் எழுத்தை வைத்து எளிதில் கண்டு பிடித்து விடலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------

மிக எளிதில் தமிழ் படிப்பது பற்றி வரும் நாட்களில் பதிவு செய்யப்படும்....



No comments: