-->

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழர் - கமலா தேவி ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ். இதற்கு முன்பு இவர் செய்த சாதனைகள்.

கமலா தேவி ஹாரிஸ்

  • துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள, ஜனநாயக கட்சியின் முதல் கறுப்பினப் பெண் - கமலா தேவி ஹாரிஸ்
  • தேர்தலில் வென்றால், அமெரிக்க துணை அதிபராகும் முதல் பெண். முதல் ஆப்ரிக்க அமெரிக்கர், முதல் இந்திய அமெரிக்கர்
  • இதற்கு முன், இரண்டு பெண்கள் மட்டுமே, துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த, 2008ல் குடியரசு கட்சி சார்பில், சாரா பாலின்; 1984ல் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜெரால்டின் பெராரோ போட்டியிட்டனர். ஆனால், வெற்றி பெறவில்லை.
  • முதல் கவுன்டி அட்டர்னி எனப்படும் அரசு வழக்கறிஞர்; சான்பிராஸ்சிஸ்கோ மாவட்ட அட்டர்னியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்; அந்த மாவட்ட அட்டர்னியாக நியமிக்கப்பட்ட, முதல் ஆப்ரிக்க அமெரிக்கர், முதல் இந்திய அமெரிக்கர்
  • கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண், முதல் இந்திய அமெரிக்கர்
  • செனட் சபை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர், இரண்டாவது ஆப்ரிக்க அமெரிக்கர்.

Related Posts

Post a comment

Subscribe Our Posting