-->

10th, 11th, 12th Hall Ticket Download | 10, 11, 12-ஆம் வகுப்பு ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுபற்றி அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், 15.06.2020 முதல் 25.06.2020 வரையும், 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும், 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் நடைபெறவுள்ளன.

மேற்குறிப்பிட்ட தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 04.06.2020 (வியாழக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிய, தேர்வுக் கூட நுழைவுச் சீட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Download Hall Ticket: www.dge.tn.gov.in



Related Posts

Post a comment

Subscribe Our Posting