Ads 720 x 90

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 22.01.2019 Download PDF

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஓராண்டில் 5 லட்சம் பேர் பயன்
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் 5, 42, 878 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது சிகிச்சை செலவுக்காக அந்த காலகட்டத்தில் மாநில அரசு ரூ. 909 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிகபட்சமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவச் செலவினங்களுக்கு மட்டும் ரூ.150 கோடி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர் ரயில் மாறுகிறது
சென்னை புறநகர்ப் பாதை இன்னும் 9.5 கி.மீ. நீளப் பாதை அமைந்துவிட்டால்  போதும். இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர்ப் பாதை மாறிவிடும் என்கிறது தெற்கு ரயில்வே. தக்கோலம் முதல் அரக்கோணம் வரையிலான அந்த 9.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்சேவை தொடங்கிவிட்டால் சுமார் 235.5 கி.மீ. தொலைவுக்கு இந்த சுற்றுவட்ட ரயில்பாதை அமையும். தற்போதைக்கு கொல்கத்தாவில்தான் (35 கி.மீ) இந்தியாவிலேயே மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதை உள்ளது.

விரைவில் காவிரி- கோதாவரி இணைப்பு: மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
காவிரி நதியையும், கோதாவரி நதியையும் இணைக்கும் முக்கிய நதி நீர் இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.60,000 கோடி வரை தேவைப்படும்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின (பிரவாசி பாரதிய திவஸ்) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி 22.01.2019 அன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத் பங்கேற்கிறார். வழக்கமாக ஜனவரி 9-ஆம் தேதிதான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் நடைபெறும். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (அலாகாபாத்) நடைபெறும் கும்பமேளா மற்றும் 70-ஆவது இந்திய குடியரசு தின விழாவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க வசதியாக இந்த மாநாடு இந்த முறை ஜனவரி 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (54), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக 21.01.2019 அன்று அறிவித்தார்.
இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அமெரிக்க நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பதுடன், வெள்ளையர் அல்லாத முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.
  • கமலா ஹாரிஸின் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராவார். அவரது தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவர்.
  • கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட
  • கருப்பினத்தைச் சேர்ந்த முதல் மேலவை உறுப்பினர் (கலிஃபோர்னியா) என்ற பெருமைக்கு உரியவராவார்.
  • அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
  • கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.
  • கலிஃபோர்னியா மாகாணத்தின் முதல் இந்திய வம்சாவளி அட்டர்னி ஜெனரல் என்ற பெருமையை பெற்றார்.
வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்
இந்த ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், பிரான்ஸும் பிரிட்டனை பின்னுக்குத் தள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இப்போது 5-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டன் ஏழாவது இடத்துக்கு பின்தங்கும் என்றும் ஐஎம்எஃப் (ஐஎம்எஃப்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2019-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ஆசிய பொருளாதார வளர்ச்சி 2018-ஆம் ஆண்டு 6.5 சதவீதமாக இருந்தது. இது 2019-ஆம் ஆண்டில் 6.3 சதவீதமாகக் குறையும். ஆனால் 2020-ஆம் ஆண்டு சற்று மேம்பட்டு 6.4 சதவீதமாக உயரும். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது.
நேபாளத்தில் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கரன்சிக்குத் தடை
நேபாளத்தில் ரூ.2,000, ரூ.500, ரூ.200 ஆகிய மதிப்பிலான இந்திய கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி தடை விதித்துள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா: நாகாலாந்துக்குப் பொருந்தாது: முதல்வர் ரியோ கடிதம்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றினாலும், அரசமைப்புச் சட்டத்தின் 371(ஏ) பிரிவின்படி, நாகாலாந்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளிக்காதவரை, அந்தச் சட்டத் திருத்தம் நாகாலாந்துக்குப் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில முதல்வர்  எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மக்கள்தொகை 139 கோடியை தாண்டியது
சீனாவின் மக்கள் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டில் 139.5 கோடியை எட்டியுள்ளது. இதில், 60 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை 24.9 கோடியாக (18%) உள்ளது. சீனாவின் மக்கள் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் 1.52 கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது. சீனாவில் பிறப்பு விகிதத்தை பொருத்தவரையில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக சரிவடைந்தே காணப்படுகிறது. நீண்ட காலமாக ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்ளும் திட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்தது.

ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புது சாதனை
ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி செவ்வாய்கிழமை படைத்தார். 2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டன. அவற்றில் 3 உயரிய விருதுகளான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது ஆகியவற்றுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை இந்திய அணி, கோலி தொடர்ந்து முதலிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியும், கேப்டன் விராட் கோலியும் தங்கள் முதலிடங்களை தக்க வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments