Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
- ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
- கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.
- நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்: இருண்ட பகுதியில் முதல் முறையாக இறங்கி சாதனை.
- இந்தியாவின் காபி ஏற்றுமதியில் சரிவு.
- தமிழகம், புதுச்சேரி உட்பட, 31 மாநிலங்களில் 43% மழை அளவு குறைந்துள்ளது.
- கத்தியின்றி ஒலி மூலம் அறுவை சிகிச்சை.
ரூ.32 ஆயிரம்
கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில்
ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிதாக 15 தொழில் ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதலை
அமைச்சரவை வியாழக்கிழமை அளித்தது. தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, வரும்
23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கட்டாயத்
தேர்ச்சிக் கொள்கையை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
பள்ளிகளில்
8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்வதற்கான
சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்
திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில்
தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில்
மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும்.
நிலவில்
வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்: இருண்ட பகுதியில் முதல் முறையாக இறங்கி சாதனை
பூமியிலிருந்து
பார்த்தால் தெரியாத நிலவின் பின் பகுதியில், சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக
வியாழக்கிழமை தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. மேலும், இதுவரை அறியப்படாத அந்தப் பகுதியின்
படங்களையும் முதல் முறையாக அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்தியாவின்
காபி ஏற்றுமதியில் சரிவு
சென்ற
2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 7.36 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த
2017-இல் நாட்டின் காபி ஏற்றுமதி 3,78,119 டன்னாக இருந்த நிலையில், 2018-இல் அதன் ஏற்றுமதி
7.36 சதவீதம் சரிவைக் கண்டு 3,50,280 டன்னாகியுள்ளது.
தமிழகம்,
புதுச்சேரி உட்பட, 31 மாநிலங்களில் 43% மழை அளவு குறைந்துள்ளது
தமிழகம்,
புதுச்சேரி உட்பட, 31 மாநிலங்களில் மழை அளவு குறைந்துள்ளது. வட கிழக்கு பருவமழை பொய்த்த
நிலையில், 43 சதவீத அளவுக்கு, மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை
மற்றும் வட கிழக்கு பருவமழை ஆகியன, இந்தியாவின் முக்கிய நீராதாரம் தரும் பருவகாலங்கள்.
இதில், வட கிழக்கு பருவமழையில் மட்டுமே, தென் மாநிலங்களுக்கு அதிக மழை கிடைக்கும்.
கிழக்கு மாநிலங்களுக்கும், வட கிழக்கு பருவகாலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தீரும்.இந்த
ஆண்டு வடகிழக்கு பருவமழை, 112 சதவீதம் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால், 77 சதவீதத்துடன், தமிழகத்தில் மழை நின்று விட்டது.
கத்தியின்றி
ஒலி மூலம் அறுவை சிகிச்சை
வெறும்
ஒலியின் ஆற்றலால் நினைத்தபடி பொருட்களை அசைக்கவும், அந்தரத்தில் நிறுத்தவும் உதவும்
'ஒலிக் கிடுக்கி'யை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஐநுாறு மிகச்சிறிய ஒலி பெருக்கிகளை
ஒரு சட்டகத்தில் வைத்து, இடைப்பட்ட காற்று வெளியில் ஒலி அலைகளை செலுத்தி, நுண்ணிய பொருட்களை
அப்படியே நிறுத்தவும், நகர்த்தவும் ஒலிக் கிடுக்கியால் முடிகிறது. ஸ்பெயினிலுள்ள, நவாரே
பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனிலுள்ள, பிரிஸ்டால் பல்கலைக்கழகம் ஆகியவற்றை
சேர்ந்த விஞ்ஞானிகள், ஒலிக் கிடுக்கியை உருவாக்கியுள்ளனர்.
0 Comments