Latest Current Affairs in Tamil Medium October 2016 - Date: 15.10.2016

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc. 

Latest Current Affairs Contains in following Titles:
அப்துல் கலாம் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று (15.10.2016) ராமேஸ்வரம் பேக்கரும்பில் கலாமின் நினைவிடம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அமுதாவுக்கு சர்வதேச விருது
வானிலையைக் கண்காணிப்பதற்கும், கணிப்பதற்கும் ஆபத்தான உலோகமான பாதரசத்தால் ஆன கருவிகளுக்குப் பதிலாக டிஜிட்டல் கருவிகளுக்கு மாறுவதற்கு வளரும் நாடுகளுக்குத் தடையை உண்டாக்கும் காரணிகள் எவை என்பது குறித்த ஆய்வு அறிக்கையை விஞ்ஞானி அமுதா சமர்ப்பித்துள்ளார். இதற்காக உலக வானிலை ஆய்வு மைய நிறுவனத்தின் பேராசிரியர் "டாக்டர் வில்ஹோ வைசலா விருது' என்பவரின் பெயரில் 1986-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் விருது செப்டம்பரில் ஸ்பெயினில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா ஆவார்.

வணிகவரி வருவாய் அதிகரிப்பு: தமிழக அரசு தகவல்
நிகழ் நிதியாண்டில் செப்டம்பர் வரை ரூ.31,367.18 கோடி மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வரி கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலான ரூ.29,172.95 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.2,194.23 கோடி கூடுதலாகும்' என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை (14.10.2016) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா-ரஷியா இடையே 16 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி-புதின் முன்னிலையில் கையெழுத்து
கோவா மாநிலம், பாணாவலி (பெனோலிம்) கடற்கரை நகரில் நடைபெறும் "பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வந்துள்ளார். பாணாவலியில் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் முன்னிலையில் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அந்த ஒப்பந்தங்களில், ரஷியாவிடம் இருந்து "எஸ்-400 டிரையம்ப்' எனப்படும் அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்குவது, இரு நாடுகளும் இணைந்து ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் 4 போர்க் கப்பல்களை கட்டமைப்பது, "காமோவ்' ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவது ஆகியவையும் அடங்கும். இந்த 3 ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.43 ஆயிரம் கோடி ஆகும்.

ஹைதராபாதில் நவ. 25-இல் மாநில டிஜிபிக்கள் கூட்டம்
ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் வரும் நவம்பர் 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில காவல் துறை தலைமை இயக்குநர்களின் (டிஜிபிக்கள்) வருடாந்திர மாநாட்டை நடத்த மத்திய உள்துறை முடிவு செய்துள்ளது.

என்எஸ்ஜி விவகாரம்: இந்தியாவுடன் மீண்டும் பேச சீனா தயார்
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு ஆதரவளிக்கும் விவகாரம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய ராணுவத்தின் கடைசி வீரர் டேனியல் காலே காலமானார்
சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவப் படையில் செயலாற்றிய (ஐ.என்.ஏ.) கடைசி வீரராக அறியப்பட்ட டேனியல் காலே, வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 95

இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - ரஷ்யா இடையே கூடங்குளம் புதிய அணு உலை உட்பட 16 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள கோவா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின் - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இரு நாடுகளுக்கு இடையேயான ஆண்டுக் கூட்டம் பனாஜியில் நடைபெற்றது. அப்போது, மோடி - புடின் முன்னிலையில் பாதுகாப்பு எரிசக்தி, கல்வி தொடர்பான 16 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இரு நாடுகளும் இணைந்து 200 காமோவ் ஹெலிகாப்டர்களை தயாரிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரியானா, ஆந்திராவில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பது, ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பிலான அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது  உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களும் அடங்கும்.

விரைவில் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை
முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

என்எஸ்ஜி-யில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: சீனா
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதை எதிர்ப்பது என்ற விஷயத்தில் இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆதார்: பதிவு செய்தோர் எண்ணிக்கை 106 கோடி
நாடு முழுவதும் தற்போது வரை 106.69 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரத் தகவல்களின்படி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட 22 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கூட விடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அக்.15ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்துக்கு சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

முகநூலில் சம்பாதிப்பதில் இந்தியர்கள் முதலிடம்
முகநூலில் உள்ள செயல்பாட்டு குறைபாடுகள் தொடர்பாக இந்த ஆண்டு இதுவரை 9000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளில் பங்கெடுத்த 149  பேருக்கு இதுவரை, ரூ.4 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசுப்பணம் பெற்று முதலிடத்தில் உள்ளனர். இரண்டாமிடத்தில் அமெரிக்காவும், மூன்றாமிடத்தில் மெக்சிகோவும் உள்ளன.

சீனாவில் "கடல் அரிசி' உற்பத்தி செய்ய ஆராய்ச்சி
சீனாவில் "கடல் அரிசி' என்னும் ஒரு வகை அரிசியை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்திருப்பதாவது: சீனாவில் "கலப்பின அரிசி வகைகளின் தந்தை' என்று அறியப்படும் விஞ்ஞானி யுவான் லாங்பிங் தலைமையில் புதிய "கடல் அரிசி' வகையை உருவாக்க ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

வங்கதேசத்துக்கு சீனா ரூ.1.3 லட்சம் கோடி கடனுதவி
சீன அதிபரின் வங்கதேச பயணத்தின்போது அந்நாட்டுக்கு ரூ. 1.34 லட்சம் கோடி மதிப்பிலான கடனுதவி வழங்குவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் ரூ. 91,100 கோடி மதிப்பிலான தொழில் உடன்படிக்கைகள் கையெழுத்தாகின என்று வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலர் முகமது ஷாஹிதுல் ஹக் சனிக்கிழமை தெரிவித்தார்.

தாய்லாந்தில் அரசப் பிரதிநிதி பொறுப்பேற்பு
தாய்லாந்து மன்னர் காலமானதைத் தொடர்ந்து, மன்னரின் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற அரசப் பிரதிநிதி (ரீஜன்ட்) பொறுப்பேற்றார். தாய்லாந்து மன்னர் பூமிபால அதுல்யதேஜ் வியாழக்கிழமை காலமானார். அவரையடுத்து அரியணையேற வேண்டிய இளவரசர், தந்தையை இழந்த துக்கத்திலிருந்து மீள கூடுதல் அவகாசம் வேண்டுமெனக் கூறியதால், பட்டம் சூட்டும் நாள் தீர்மானமாகவில்லை. எனினும் அரசரின் கடமைகள் இடைவிடாமல் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில், அந்நாட்டின் அரசியல் சாசனப்படி அரசப் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். தாய்லாந்து மன்னர் காலமானதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

சீனா-வங்கதேசம் இடையே 26 ஒப்பந்தங்கள் கையெழுத்து
வங்கதேசத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் சீன அதிபர் ஜீ ஜின்பிங். டாக்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரு தலைவர்களின் முன்னிலையில் 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இணைந்தது 'ஐயோ'
உலகில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் ஐயோ என்ற தமிழ் வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளை நேரடியாக ஆய்வு செய்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய வார்த்தைகளை இந்த அகராதியில் இணைத்து வருகின்றனர். அந்த வகையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிர அகராதியில் 'ஐயோ' என்ற தமிழ் வார்த்தை இடம்பிடித்துள்ளது.

பொதுப் பணவீக்கம் 3.57 சதவீதமாக குறைந்தது
மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற செப்டம்பரில் 3.57 சதவீதமாக குறைந்தது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காய்கறிகளின் விலை சரிவடைந்ததையடுத்து சென்ற செப்டம்பரில் பொதுப் பணவீக்க விகிதம் 3.57 சதவீதமாக குறைந்தது. கடந்த ஆகஸ்டில் இது 3.74 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில் இது (-)4.59 சதவீதமாகவும் காணப்பட்டது.

Click to comment