TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
செயற்கைக்கோளில் சுரங்கங்கள் கண்காணிப்பு
நாடு முழுவதும் உள்ள கனிம சுரங்கங்களை செயற்கைக்கோளில் கண்காணிக்கும் முறையை மத்திய எரிசக்தி, சுரங்கத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தார். சுரங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். நாட்டில் 3,843 சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் செயல்பாட்டில் உள்ள 1,710 சுரங்கங்களில் பெரும்பாலானவை மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. செயல்பாட்டில் இல்லாத 2,133 சுரங்கங்களை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மாநில அரசுகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணி 3 மாதங்களுக்கு முடிவடையும்.
15-ஆவது பேரவையின் முதல் கூட்டத் தொடர் முடித்துவைப்பு
15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 25-இல் தொடங்கியது. அன்றைய தினம் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். ஜூன் 3-இல் சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலும், 17-இல் ஆளுநர் உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 16-இல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. "இந்திய அரசமைப்புப் பிரிவு 174 (2)-ன் கீழ், 15-ஆவது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைத்துள்ளார்'
ரூ.39,849 கோடியில் கூடங்குளம் 3, 4 ஆவது அணு உலை கட்டுமானப் பணி
இந்திய, ரஷிய கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், இங்கு கூடுதலாக 4 உலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 3, 4ஆவது உலைகளுக்கு கடந்த ஜனவரி 22ஆம் தேதி அனுமதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி 3, 4ஆவது உலைகளுக்கு பூமி பூஜை நடந்தது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், காணொலிக் காட்சி மூலம் 3, 4ஆவது உலை கட்டுமானப் பணியை கூட்டாக தொடங்கி வைத்தனர்.
நவம்பர் 12-இல் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்
தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நவம்பர் 12-இல் நடைபெறுகிறது.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விசாரிக்க மாதம்தோறும் மாநில, தேசிய அளவிலான லோக் அதாலத் விசாரணை நடத்தப்படுகிறது. நிகழாண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) தேசிய அளவில் 8 லோக் அதாலத் எனப்படும் மக்கள் மன்றங்கள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தேசிய மெகா லோக் அதாலத் நவம்பர் 12-இல் நடத்தப்படுகிறது.
உலக முட்டை தினவிழா - அக்டோபர் 14
ஆண்டுதோறும் அக்டோபர் 14-ம் தேதி உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் உலக முட்டை தினவிழா நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
இன்று அக்டோபர் 16-ம் தேதி ஒடிசா முதல்வர் வீன் பட்நாயக்கிற்கு 71வது பிறந்த நாள்., யுரி தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக தனது பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்தியா- அமெரிக்கா சிறந்த நட்பு நாடுகளாக மாறும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
அமெரிக்க அதிபராக நான் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவேன் என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். மேலும், இந்திய பொருளாதாரத்தையும் ஆட்சிமுறையையும் மாற்றியமைத்த மிகச்சிறந்த நிர்வாகி நரேந்திர மோடி என்று புகழாரம் சூட்டியுள்ளார்
இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மூன்று நாள் பயணமாக வரும் நவம்பர் 6-ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசுவார். மேலும் தில்லியில் நடக்க உள்ள தொழில்நுட்ப உச்சிமாநாட்டை அவர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானங்களில் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களுக்குத் தடை
விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக அமெரிக்க அரசு வெள்ளிக்கிழமை (14.10.2016) அதிரடியாக அறிவித்தது.
நாட்டின் தங்கம் இறக்குமதி 10% குறைந்தது
இந்தியாவின் தங்கம் இறக்குமதி சென்ற செப்டம்பர் மாதத்தில் 10.3 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: சென்ற செப்டம்பரில் 180 கோடி டாலர் (சுமார் ரூ.11,880 கோடி) மதிப்பிலான தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மதிப்பான 200 கோடி டாலருடன் (சுமார் ரூ.13,200 கோடி) ஒப்பிடுகையில் இது 10.3 சதவீதம் குறைவாகும்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.105 கோடி லாபம் ஈட்டிய ஏர்-இந்தியா
பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு முதல்முறையாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் ரூ.105 கோடியாக இருந்தது. 2015-16 ஆண்டுக்கான ஏர்-இந்தியாவின் நிதி அறிக்கையை நிர்வாகக் குழு ஏற்றது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஏர்-இந்தியாவுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து ஏர்-இந்தியா நிறுவனம் முதல்முறையாக சென்ற 2015-16-இல் ரூ.105 கோடியை செயல்பாட்டு லாபமாக ஈட்டியது. கடந்த 2014-15-இல் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு இழப்பு ரூ.2,636 கோடியாக காணப்பட்டது.
Post a Comment