Daily GK Update: Current Affairs in English Medium. Date: 26.10.2016

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc. 

Latest Current Affairs Contains in following Titles:
  • வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது
  • பாதுகாப்புப் படையினர் இனி இணைய வழியில் வாக்களிக்கலாம்
  • சீனாவைஒட்டிய எல்லைப் பாதுகாப்பில் முதல்முறையாக இந்திய வீராங்கனைகள்
  • அமெரிக்கத் தூதரின் அருணாசல் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு
  • டாடா நிறுவன குழும தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கம்
  • சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தொடக்கம்
  • உலகிலேயே 500 கிலோ தாஜ்மகாலாக வாழும் எகிப்திய பெண்மணி
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது
  • வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தமிழகத்துக்கு மிக அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்காக நகர்ந்து சென்று தற்போது உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் இனி இணைய வழியில் வாக்களிக்கலாம்
  • ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோர், இனி வரும் தேர்தல்களில் இணைய வழி தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதுதொடர்பான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இதுதொடர்பாக 1961-ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு கடந்த 21-ஆம் தேதி அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது.
சீனாவைஒட்டிய எல்லைப் பாதுகாப்பில் முதல்முறையாக இந்திய வீராங்கனைகள்
  • சீனாவைஒட்டிய எல்லைப் பகுதியில், இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் முதல்முறையாக எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கத் தூதரின் அருணாசல் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு
  • இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர், அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறியதாவது: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்னையாக உள்ள ஓரிடத்துக்கு அமெரிக்கத் தூதர் ஒருவர் சென்றதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம். இந்திய-சீன எல்லை விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று அமெரிக்காவை கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு தலையிட்டால் அது பிராந்திய அமைதியைக் கெடுக்கும் செயலாகவே இருக்கும். இதனால், இந்திய-சீன மக்கள்தான் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.
டாடா நிறுவன குழும தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கம்
  • டாடா நிறுவன குழும தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி திடீரென நீக்கப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரியை நீக்கி டாடா சன்ஸ் நிறுவன நிர்வாக குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டாடா குழுமத்தின் இடைக்கால தலைவராக ரத்தன் டாடா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தொடக்கம்
  • சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் திங்கள்கிழமை (24.10.2016) தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் முடிவில், அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டின்போது, அரசின் செயல்பாடுகள் குறித்து அதிபர் தலைமையிலான அரசியல் விவகாரக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும். தற்போது அக்கட்சியின் விதிமுறைப்படி, அதிபர் ஜீ ஜின்பிங் 2022 வரை பதவி வகிக்கலாம். 
உலகிலேயே 500 கிலோ தாஜ்மகாலாக வாழும் எகிப்திய பெண்மணி
  • எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் 500 கிலோ உடல் எடையுடன், உலகிலேயே அதிக உடல் எடை கொண்ட பெண்மணி என்ற இடத்தைப் பிடித்துள்ளார். அலெக்சாண்ட்ரியாவைச் சேர்ந்த 36 வயதாகும் இமான் அஹமது அப்துலாடி என்ற பெண்மணி கடந்த 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறவே இல்லை. இவரத உடல் எடை காரணமாக அவர் தனது வாழ்நாளை படுக்கையிலேயே கழித்து வருவதாகவும் டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

Click to comment