44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது.
எஃப்.ஐ.டி.இ (FIDE) எனப்படும் பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு 1927ஆம் ஆண்டு முதல் இது வரை 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியுள்ளது. செஸ் போட்டி ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் தொடர் செஸ் ஒலிம்பியாட் தான். வெவ்வேறு நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் ஒருமுறைகூட இந்தியாவில் நடத்தப்பட்டதில்லை.
தற்போது இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடுதான் இந்த போட்டியை நடத்த உள்ளது. மேலும் இப்போட்டி உத்தேசமாக 26 ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 8, 2022 வரை இந்த போட்டி நடைபெறும் என்று தெரிகிறது.
Post a Comment