TNPSC Current Affairs Today Date: 11.12.2021
'பிரிக்ஸ்' நாடுகளில் இந்தியா முன்னணி
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்தும் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் - 2021 அறிக்கையை நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டது. .இந்த உறுப்பு நாடுகளில், இந்தியாவின் பொருளாதார மீட்சி அதிகமாக இருக்கும் என அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாட தமிழக அரசு உத்தரவு
'அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்தக் கூடாது' என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக, விழாவை நடத்துவோர், இதற்கென பயிற்சி பெற்றவர்களை வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட, ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணிக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த ஐநா
சர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்தை தவிர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு பருவநிலை மாற்றத்தை தவிர்க்க சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை எதிர்காலத்தில் பயன்படுத்த கடந்த 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த சிஓபி மாநாட்டில் முடிவெடுத்தன. இதற்காக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சர்வதேச அளவில் ஊக்குவிக்க பிரத்யாகமாக சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி உருவாக்கப்பட்டது. அப்போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இதுகுறித்து விரிவாகப் பேசினார்.
தற்போது ஐநா., ஜெனரல் அசம்பிளி சர்வதேச சூரிய ஆற்றல் ஒருங்கிணைப்பு கூட்டணி திட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த குழுவில் இந்தியா பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் சோலார் தகடுகள் மூலமாக மின்சாரம் தயாரிப்பதை அதிக அளவில் ஊக்குவிப்பதன் காரணமாக நிலக்கரியின் பயன்பாடு குறைந்து அதிகரிக்கும் வெப்ப நிலையை கட்டுப்படுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
ஐநாவின் இந்திய தூதர் டிஎஸ் திருமூர்த்தி இதுகுறித்து கூறுகையில் ஐநா., பொது அசம்பிளி தலைவர் அப்துல்லா சாகித் தலைமையில் சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்புக்கு அங்கீகாரம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை எடுத்த ஐநா., அமைப்புக்கு பாராட்டு தெரிவித்த அவர், ஐநா சட்டப்பிரிவு 76 பார் 123 படி இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 80 நாடுகள் இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்து கையெழுத்திட்டுள்ளன. எதிர்காலத்தில் 101 நாடுகள் இந்த திட்டத்தில் இணையும் என்று ஐநா., கணித்துள்ளது. இதன்மூலமாக இயற்கை முறையில் மின்சார ஆற்றலை தயாரித்து பருவநிலையை பாதுகாக்க முடியும் என ஐநா., அமைப்பு நம்புவது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி சான்றிதழுக்கு 108 நாடுகள் அங்கீகாரம்
நாட்டில் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியா வழங்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சர்வதேச அளவில் 108 நாடுகள் பரஸ்பரம் அங்கீகரித்துள்ளன. கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இதில் அடக்கம்.
விதிமீறலால் பல்வேறு நாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள அமெரிக்கா
மனித உரிமை மீறல் பிரச்னை காரணமாக, சீனா, மியான்மர், வடகொரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோ பைடன் அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்நாடுகளுடனான தொடர்பை துண்டிக்க உத்தரவிட்டுள்ளது. இதேபோல சமீபத்தில் கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் மியான்மர் நாடுகளுடன் தொடர்பை துண்டித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மியான்மர் நாட்டின் ராணுவ அதிகாரிகள் பிரிட்டனுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது.
Post a Comment